விசைத்தறி தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம் செப்.5 ஆம் தேதி பேச்சுவார்த்தை
7 hours before

விசைத்தறி தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம் செப்.5 ஆம் தேதி பேச்சுவார்த்தை

நாமக்கல், செப்.3-கூலி உயர்வு வழங்கக்கோரி விசைத்தறி தொழிலாளர்கள் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வரும் சனியன்று பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உத்தரவாதத்தால் போராட்டம் தற்காலிகமாக திரும்பப்பெறப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் 75 சதம் கூலி உயர்வு வழங்கக்கோரி விசைத்தறி தொழிலாளர்கள் எதிர் மேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக 60-க்கும் மேற்பட்ட விசைத்தறிக்கூடங்கள் இயங்கவில்லை. இந்நிலையில், உரிய கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, எதிர் மேடு பகுதியில் இருந்து புதனன்று ஏராளமான விசைத்தறி தொழிலாளர்கள் ஊர்வலமாக குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். பின்னர் விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.அசோகன் தலைமையில் காத்திருப்புப் போராட்டத்தை துவக்கினர்.

இதனையடுத்து குமாரபாளையம் சமூக நலத்துறை வட்டாட்சியர் சிவக்குமார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குமாரபாளையம் வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று உள்ளதாகவும், வரும் சனியன்று ஜவுளி உற்பத்தியாளர்கள், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளர் ஆகியோர்அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் உறுதியளித்தனர். இதனையடுத்து தற்காலிகமாக காத்திருப்பு போராட்டம் திரும்ப பெறப்பட்டு தொழிலாளர்கள்கலைந்து சென்றனர். இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.வேலுச்சாமி, மாவட்ட உதவி செயலாளர் சு.சுரேஷ், சிஐடியு சங்க நிர்வாகிகள் கே.பாலுசாமி, வெங்கடேஷ், சிபிஐ நகரச் செயலாளர் கணேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.