தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குட்டன் கட்டிய மணி - உதயசங்கர்

21 Nov 2026, 9:28 pm
குட்டன் கட்டிய மணி - உதயசங்கர்

குட்டன் கட்டிய மணி - உதயசங்கர்

எலியூரில் எலிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. காடுகளில் விதைகள், தானியங்கள், பழங்கள், கொட்டைகள், சிறு பூச்சிகளைச் சாப்பிட்டன. யாருக்கும் பயப்படாமல் சுதந்திரமாக இருந்தன. எலியூரில் எலித்திருவிழா. திருவிழா என்றாலே எலிக்குட்டிகளுக்குக் கொண்டாட்டம். எப்போதும் கீச் கீச் கீச் என்று சத்தம் போட்டுக் கொண்டு அங்கும் இங்கும் ஓடின. ஆடிப்பாடின..

திருவிழா திருவிழா எலியூரில் திருவிழாஆடுவோம் எலித் தம்பிபாடுவோம் எலி அண்ணேசேர்ந்து ஓடுவோம் குட்டிகளாஆனந்தமாய் ஆடுவோம் அக்காக்களாவாருங்கள்! எல்லாரும்.. வாருங்கள்!

என்று பாடிக் கொண்டிருந்தன. அருகில் உள்ள ஊர்களில் இருந்து விருந்தினர் எலிகள் வந்தன. எல்லாரையும் ஒவ்வொரு வீட்டில் தங்கவைத்து விருந்து கொடுத்தன எலியூர் எலிகள்.

புலியூரில் இருந்து வந்த எலியார் மட்டும் மிகவும் கவலையாக இருந்தார்.

“ எங்களுடைய ஊரில் புதிதாக ஒரு பூனையார் வந்திருக்கிறார்.. அவர் வந்ததிலிருந்து எங்கள் மக்கள் ஒவ்வொருவராகக் காணாமல் போகிறார்கள். பூனையார் ஒளிந்து திடீர் திடீர் என்று தாக்குகிறார். பாதிப்பேரைக் காணவில்லை. பழைய காலத்தில் பூனைக்கு மணி கட்டுவார்கள், அது வரும்போது மணிச்சத்தம் கேட்டு எலிகள் ஓடி ஒளிந்து விடுவார்கள் என்று தாத்தா சொன்னார்.. இப்போது யாரும் பூனைக்கு மணி கட்டுவதில்லை.. யார் பூனைக்கு மணி கட்ட முடியும்? ? “

அதைக்கேட்ட மற்ற எலிகளும் கவலைப்பட்டன. அப்போது எலியூரின் செல்லக்குட்டியான குட்டன் எலி முன்னால் வந்தது.

“ ஏன் நாமே கட்டுவோம்..” என்று கீச்சிட்டது. யாரும் பதில் சொல்லவில்லை. எல்லாரும் குட்டன் விளையாட்டாய் சொல்கிறான் என்று நினைத்தன. மூத்த எலி முட்டன்,

“ டேய் குட்டா விளையாடாதே….அது எப்படி முடியும்? “ என்று கேட்டது.

“ முடியும்..” என்று உறுதியாகச் சொன்னது குட்டன். பிறகு தன்னுடைய திட்டத்தைச் சொன்னது குட்டன். யாருக்கும் நம்பிக்கை இல்லை. ஆனால் எல்லாரும் அரை மனதாக ஏற்றுக் கொண்டன.

எலித்திருவிழா கொண்டாட்டமாக முடிந்தது.

குட்டனின் சாகசம் எல்லாரையும் ஈர்த்தது. மின்னல் வேகத்தில் மிட்டாயை எடுக்கும்போட்டியிலும் திரும்ப வைக்கும் போட்டியிலும் குட்டன் வெற்றி பெற்றான். எல்லாரும் அவர்களுடைய ஊர்களுக்குத் திரும்பினார்கள்.

அமாவாசை நாள். எல்லா ஊர்களிலிருந்த எலிகளும் புலியூருக்குப் போனார்கள். இருட்டுக்குள் பதுங்கி இருந்தார்கள். அப்போது குட்டன் மட்டும் அங்கும் இங்கும் ‘ கீச் கீச் ’ என்று விசிலடித்துக்கொண்டே அலைந்தது. அந்தச் சத்த த்தைக் கேட்ட பூனையார் பாய்ந்து வந்தார். பதுங்கினார். மெல்ல அடி எடுத்து வைத்தார். குட்டனின் மேல் பாயப் போனார்.

இதோ பாய்ந்து விட்டார்!

குட்டனைக் கவ்வி விட்டார்.

அட! என்ன ஆச்சு?

குட்டன் முன்னால் நின்று கொண்டிருந்தான். பூனையார் வாயில் ஏதோ இருந்தது. ஆஆஆ… வாயை மூட முடியவில்லை.

மேல் தாடைக்கும் கீழ் தாடைக்கும் இடையில் ஏதோ தடுத்தது. குட்டனைக் கவ்விப் பிடிக்கத் திறந்த வாயில் ஒரு குச்சி நின்று கொண்டிருந்தது. பூனையார் வாயை மூட முயற்சித்தார். வாய் வலித்தது.

என்ன நட ந்த து என்று புரியவில்லை. அடுத்த கணம் எலிகள் எல்லாம் ஓடி வந்தன. வரும்போது பெரிய மணியைத் தூக்கிக் கொண்டு வந்தன. பூனையின் கண் முன்னாலே அந்த மணியைக் கழுத்தில் கட்டின. பூனை தலையை அசைத்தது.

“ கிணிங்..கிணிங்.. “ என்று மணிச்சத்தம் ஒலித்த து. உடனே எல்லா எலிகளும் இருளில் ஓடி மறைந்தன. பூனையாருக்கு முன்னால் நின்று கொண்டிருந்த குட்டன் பாய்ந்து வந்தான்.

அடுத்த நொடி.. பூனையாரின் வாயில் இருந்த குச்சியைக் காணவில்லை. பூனையார் வாயை மூடினார். கோபத்தில் அங்கும் இங்கும் ஓடினார். மணிச்சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. என்ன நடந்தது என்றே புரியாமல் பூனையார் கிணிங் கிணிங் என்று சத்தத்துடன் நடந்து போனார்.

எலி பிடிக்கும் பூனைக்கு மணி கட்டியது யார்?

கிணிங் கிணிங் கிணிங் எளியோருக்குத் துன்பம் வந்தால் என்ன செய்ய குட்டா?வலியோரை எதிர்கொள்ள தந்திரம் வேண்டும் அண்ணே!நாம் தந்திரம் செய்யணும் அண்ணே!என்று எல்லா எலிகளும் பாடி ஆடிக் கொண்டிருந்தன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.