தில்லியில் இடதுசாரி தலைவர்கள் கைது: தமிழகத்தில் ஆவேச போராட்டம்
1 hour before

தில்லியில் இடதுசாரி தலைவர்கள் கைது: தமிழகத்தில் ஆவேச போராட்டம்

சென்னை, அக்.10-எஸ்.ஐ.ஆர். மூலம் பல கோடி வாக்காளர்களின் வாக்குரிமையை பறித்து தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்ட இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்க வலியுறுத்தி டெல்லியில் சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சிபிஎம் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் எம்.ஏ.பேபி, தமிழ் மாநில செயலாளர் பெ.சண்முகம், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, பினராயி விஜயன், மத்திய குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மத்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்களை அடாவடியாக டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. பல கோடி மக்களின் வாக்குகளை பறித்த ஞானேஷ்குமாரை நீக்க வக்கில்லாத மோடி அரசு போராட்டக் காரர்களை கைது செய்ததைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்சென்னை

கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாநிலச் செயற்குழு கே. சுவாமிநாதன், மாநிலக்குழு உறுப்பினர் கே. வனஜகுமாரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் க. பீம்ராவ், ஏ. பாக்கியம், பகுதிச் செயலாளர்கள் எஸ். முகமதுரஃபி, (சிபிஎம்), ஜெயக்குமார் (சிபிஐ) ஆகியோர் பேசினர். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் வே. ராஜசேகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். குமார், ச. லெனின், ம. சித்ரகலா, டி. சுந்தர், ஜி. செந்தில்குமார் உள்ளிட்டு நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பொன்னேரி

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞாநேஷ்குமார் உருவ படத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீட்டு எரித்தனர். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.விஜயன், ஜி.சம்பத், மாவட்ட குழு உறுப்பினர்கள் இ.தவமணி, டி.மதன், இ.ஜெயவேல், எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் எஸ்.ஏ.கலாம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கு பொன்னேரி பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர் தலைமை தாங்கினார்.

திருவள்ளூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் டி.பன்னீர்செல்வம், கே.ராஜேந்திரன், ஏ.ஜி.கண்ணன், ஆர்.தமிழ்அரசு, இ.மோகனா, சிபிஐ மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் மாவட்ட செயலாளர் நேரு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார் உள்ளிடோர் பங்கேற்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.கீதா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.முத்துகுமரன்,ஜி.ராஜேந்திரன், ஆர்.மூர்த்தி, சே.அறிவழகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.முருகன், என்.நாராயணன், பிச்சை, எம்.செல்வகுமார், ஆறுமுகம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர்,சிபிஐ-எம் எல் மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கே. பூவராகவன், எம்.செந்தில்,ஜெ.ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எம். சிவக்குமார், மாவட்ட செய லாளர் ப. செல்வன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (எம் எல்) மாவட்ட செய

லாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கடலூர்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கடலூர் ஜவான் பவன் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் வினோத்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் சின்னத்தம்பி, மாவட்டப் பொரு ளாளர் கலைவாணன், கடலூர் நகரச் செயலாளர் ஆனந்தராஜ், நெல்லிக்குப்பம் செயலாளர் அருண் ராஜ், நகரத் தலைவர் ஆகாஷ், ஒன்றியத் தலைவர் ஞான பிரகாஷ், நெல்லிக்குப்பம் தலைவர் முத்தரசன், ஒன்றியப் பொருளாளர் பரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மோடி அரசைக் கண்டித்தும், தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்க வலியுறுத்தியும் ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

நெய்வேலி

நெய்வேலியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு நகரச் செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன், மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உதயகுமார், திருவரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

சிதம்பரம்

சிதம்பரத்தில் நகர செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கருப்பையன், வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஒன்றிய மோடி அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.