இடதுசாரி கட்சிகளின் கூட்டு அறைகூவல் நவ.10 வெளியீடு
12 hours before

இடதுசாரி கட்சிகளின் கூட்டு அறைகூவல் நவ.10 வெளியீடு

சென்னை, அக். 27 -இடதுசாரி கட்சிகளின் கூட்டு அறைகூவல் வெளியிட்டு நிகழ்ச்சி நவ.10 தி.நகரில்உள்ள சர்பிடி தியாகராய அரங்கில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.இதனையொட்டி சென்னை மாவட்ட இடதுசாரி கட்சிகள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தயாரிப்பு கூட்டம்செவ்வாயன்று (அக். 27) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமத்திய சென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர்கள் எம்.ராமகிருஷ்ணன் (வடசென்னை), ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை), சிபிஐ மாவட்டச் செயலாளர்கள் எஸ்.கே.சிவா (தென்சென்னை), வரதன்(மத்திய சென்னை), வெங்கடேஷ் (தென் சென்னை), சிபிஐ(எம்எல்)எல் சார்பில் ஆர்.மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.