எல்ஐசி முகவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
1 hour before

எல்ஐசி முகவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் சார்பில், முகவர்களின் கமிஷனை மீண்டும் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் வியாழனன்று (அக். 8) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை தலைவர் ஜி. தணிகாசலம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கிளை செயலாளர் என். ஜெயகுமார், மாவட்ட நிர்வாகிகள் ஏ.ஜி. கண்ணன், என். கீதா, கே. ஆறுமுகம் மற்றும் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர் ரமேஷ் ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக, முருகன் நன்றி கூறினார்.

ராணிப்பேட்டை எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ரவிகுமார் தலைமை தாங்கினார். கௌரவத் தலைவர் ரத்தினம், ஜெயக்குமார், முன்னாள் மாநிலச் செயலாளர் வெங்கடேசன், கிளைப் பொருளாளர் மணிமாறன், எம். கணபதி, கிளை துணைச் செயலாளர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி கண்டன உரையாற்றினர். உடன் முகவர்கள் லட்சுமிபதி, ஏழுமலை, கன்னியப்பன், லோகநாதன் மற்றும் எல்.ஐ.சி. அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.