முந்தய பக்கம்

எல்ஐசி பங்குகளை விற்பனை செய்யும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

1 hour before
எல்ஐசி பங்குகளை விற்பனை செய்யும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
<p><strong>எல்ஐசி பங்குகளை விற்பனை செய்யும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்</strong></p><p>சென்னை, ஆக. 5-எல்ஐசி நிறுவனத்தின் 6.5 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் ஒன்றிய அரசின் முடிவைக் கண்டித்து, சென்னை அண்ணாசாலை எல்ஐசி அலுவலகவாயிலில் ஊழியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் சென்னைபகுதி - 1 சார்பில் இப்போராட்டம் நடைபெற்றது.</p><p>ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ரமேஷ்குமார், எல்ஐசி பங்குகளைத் தனியாரிடம் விற்காமல் அரசே முழுமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். பங்குவிற்பனையால் பாலிசிதாரர்களுக்கு வழங்கப்படும் போனஸ் தொகை குறையும் என்றும், பொதுத்துறைநிறுவனங்களுக்கு எதிரான இத்தீர்மானத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.இந்த போராட்டத்தில், சங்கத்தின் தலைவர் கே.கிரிதர், பொருளாளர் வி.ரமேஷ், துணைத் தலைவர்கள்எஸ்.ரவிக்குமார், சி.மகேஷ், இணைச் செய லாளர்கள் பிரவின், விஜயலட்சுமி, துணை காசாலர் இளங்கோஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram