ஒவ்வொரு ஊரிலும் பள்ளி, கல்லூரிகளில் ஊழல் எதிர்ப்பு மன்றங்கள் அவசியம் லோக் ஆயுக்தா உறுப்பினர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்
3 hours before

ஒவ்வொரு ஊரிலும் பள்ளி, கல்லூரிகளில் ஊழல் எதிர்ப்பு மன்றங்கள் அவசியம் லோக் ஆயுக்தா உறுப்பினர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்

சென்னை, ஆக.21-ஒவ்வொரு ஊரிலும் பள்ளி, கல்லூரி

களிலும் ஊழல் எதிர்ப்பு மன்றங்கள் அவசியம் என்று தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தியுள்ளார்.திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்களுக்காக நடைபெற்ற நல்லாட்சி, ஊழல் தடுப்பு மற்றும் தமிழ்நாடு லோக் ஆயுக்தாகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் நார்னாவரே மனிஷ்சங்கர்ராவ் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய வீ. ராமராஜ், அரசு அலுவலர்கள் வெறும்அரசு ஊழியர்கள் அல்ல; அவர்கள் அரசின் பிரதிநிதிகளாகவும், மக்களின்சேவகர்களாகவும் உள்ளனர். ஒரு குடிமகன் அரசு அலுவலகத்திற்கு வரும்போது, அலுவலரின் மூலம் அரசையே பார்க்கிறார். எனவே, ஒவ்வொரு அலுவலரின் செயல்பாடும் அரசின் மீதான மக்களின் நம்பிக்கையை உயர்த்தவோ குறைக்கவோ முடியும். ஊழல்என்பதுலஞ்சம் பெறுவதில் மட்டும் முடிவதில்லை; அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், அரசு நிதி மற்றும் சொத்துகளை முறைகேடாகப் பயன்படுத்துதல், தேவையற்ற நிர்வாகத்தாமதம், நலன் மோதல் உள்ளிட்டவையும் நல்லாட்சிக்கு எதிரானவை என்று தெரிவித்தார்.லோக் ஆயுக்தாவில் ஐஏஎஸ்,ஐபிஎஸ் உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்கு எதிரான புகார் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால், அவர்களது பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்படலாம். ஆனால், “லோக் ஆயுக்தா நிர்வாகத்திற்கு எதிரான அமைப்பு அல்ல. நேர்மையான நிர்வாகத்திற்கு ஆதரவான அமைப்பு” என்று குறிப்பிட்ட அவர்,நேர்மையான அலுவலர்கள் அச்சப்படத் தேவையில்லை. உண்மைக்கு புறம்பான புகார்களை அளிப்பவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் லோக்ஆயுக்தாவுக்கு இருப்பதாகவும் தெரிவித்தார். .

ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் அரசு ஊழியர்களுக்கு ஊழல் எதிர்ப்புச்சட்டங்கள் மற்றும் தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் குறித்த பயிற்சி வழங்கவேண்டும். நுகர்வோர் மன்றங்கள் செயல்படுவதைப் போல, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் ஒவ்வொரு ஊரிலும்ஊழல் எதிர்ப்பு மன்றங்கள் தொடங்கப்பட வேண்டும். மேலும், மாவட்ட மற்றும் மாநில அளவில் ஊழல் எதிர்ப்புகவுன்சில்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஊழல் அதிகரித்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவதோடு ஏழைகளின் எண்ணிக்கைஉயர்ந்துநாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விடும். தேர்தல்களில் வாக்குக்காக வழங்கப்படும் பணம், பரிசு அல்லதுமுறையற்ற சலுகைகளை வாக்காளர்கள் நிராகரிக்கும் நாளிலிருந்தே ஊழலுக்கு எதிரான உண்மையான போர் தொடங்குகிறது. ஊழலுக்கு எதிரானபோரில் ஒவ்வொரு அரசு ஊழியரும் குடிமகனும் பங்கேற்க வேண்டும் என்று ராமராஜ் கேட்டுக்கொண்டார்.

உலக வங்கியின் 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ஆளுமைக் குறியீட்டு மதிப்பீட்டில், ஊழல் கட்டுப்பாட்டுக்கான நூறு புள்ளி அளவுகோலில் இந்தியா 21.4 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. இதேபோல், சர்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்புவெளியிட்ட 2025 ஆம் ஆண்டுக்கான ஊழல் உணர்வுக் குறியீட்டில், இந்தியா நூற்றுக்கு 39 புள்ளிகளை பெற்று, கணக்கிடப்பட்ட 182 நாடுகளில்91 ஆம் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். நல்லாட்சியை உருவாக்குவது அரசு அலுவலர்களின் கடமை மட்டுமல்ல. அது ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு என்றும், ஊழலைத் தடுப்பதில் ஊழல் நடைபெறாதநிர்வாகச் சூழலை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் ராமராஜ் வலியுறுத்தினார்.