தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வெல்லட்டும் கியூபா! - ஐ. ஆறுமுகநயினார்

12 Aug 2026, 9:29 pm
வெல்லட்டும் கியூபா! -  ஐ. ஆறுமுகநயினார்

வெல்லட்டும் கியூபா! - ஐ. ஆறுமுகநயினார்

கியூபா பற்றிய செய்திகள் அன்றாடம் நாளிதழ்களிலும் மின்னணு ஊடகங்களிலும் வந்த வண்ணம் உள்ளன. இடதுசாரி, ஜனநாயக மற்றும் சோசலிசக் கொள்கைகளின் பால் ஆதரவுள்ளபத்திரிகைகள் கியூபாவுக்கு ஆதரவாகவும், கியூபாவை நசுக்க நினைக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக்கண்டித்தும், அமைதியை நிலைநாட்டவும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அதேவேளையில், பெரும்முதலாளித்துவ ஊடகங்கள் ஜனநாயக வேடம் தரித்துக்கொண்டு, கியூபாவுக்கு எதிராகப் புனையப்பட்டகதைகளைப் பரப்பி, டொனால்டு டிரம்ப்பின் கொக்கரிப்புகளை உலக நலனுக்குத் தேவையானவை எனச்சித்தரித்து செய்தி ஆக்கிக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவின் பொருளாதார முற்றுகையும் கியூபாவின் உறுதியும்

1959-இல் கியூபப் புரட்சி வெற்றி அடைந்து சோசலிசக் கியூபா உருவானது முதல், கடந்த 67 ஆண்டுகளில் 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொருளாதாரத் தடைகளையும் பொருளாதார முற்றுகைகளையும் ஏற்படுத்தி, சுற்றி வளைத்துத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மூலம் கியூபாவின் பொருளாதாரக் குரல்வளையை அமெரிக்கா நெரித்துக் கொண்டிருக்கிறது.

தற்போது புதிதாக ஏற்பட்டுள்ள சூழலில், வெனிசுலாவில் நடைபெற்றது போல் ஆட்சி மாற்றத்தின் மூலமாகவோ அல்லது ராணுவ முற்றுகையின் மூலமாகவோகியூபாவைத் தனதாக்கிக் கொள்ள ஏகாதிபத்திய அமெரிக்கா துடிக்கிறது.2026 ஜனவரி 3 அன்று வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கடத்திச் செல்லப்பட்டபிறகு, வெற்றிக் களிப்பில் இருக்கும் அமெரிக்கா, ஈரானில் மாட்டிக்கொண்டு வெளியேற முடியாமல் திணறினாலும், கியூபா மீதும் கை வைக்கக்கூடும் என்ற ஆபத்து நீடிக்கிறது.இதனை எதிர்த்துப் பேசிய கியூப நாட்டின் ஜனாதிபதி தியாஸ் கானல், “எங்கள் மக்களைப் பாதுகாக்க வேண்டும்; சமூக நலத் திட்டங்களைப் பாதுகாக்க வேண்டும்; அதற்காக நாங்கள்ஆயத்தமாகி வருகிறோம்” என்றும், “எங்கள் பாதுகாப்புக் கொள்கையின் அடிப்படை தற்காப்பு சார்ந்தது;ஆக்கிரமிக்கும் நோக்கம் அற்றது; யாரையும் அச்சுறுத்தும் எண்ணம் கொண்டது அல்ல” என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதையும் மீறி அமெரிக்கா நடந்துகொள்ளுமானால், அவர்கள் ஒட்டுமொத்த மக்களின் போரைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும்எச்சரித்துள்ளார். “அமெரிக்கா பேசுகிற யுத்த மொழியில் நாங்கள் பேச விரும்பவில்லை; அமைதி வழியில் பேசவிரும்புகிறோம். கியூபாவை ஆக்கிரமிக்க நினைப்பவர்கள், போரிட்டு அழியாமல் இருந்தால், குருதி தோய்ந்த இந்தத் தேசத்தின் மண்ணை மட்டுமே அள்ளிச் செல்லமுடியும்” என்ற தோழர் மாசியாவின் கம்பீரமான வார்த்தைகளை அவர் உறுதியுடன் நினைவூட்டினார்.

பொருளாதாரச் சீர்திருத்தங்களும் சர்வதேச ஒருமைப்பாடும்

அமெரிக்காவின் முற்றுகையால் கடுமையான மனிதத் துயரத்தைச் சந்தித்து வரும் நிலையிலும், கியூபா தன் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தத் துணிச்சலான பொருளாதார மாற்றங்களை எடுத்து வருகிறது. 2026 ஜூன் 18 அன்றுநடைபெற்ற அவசர நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் 176 சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமான 23 துறைகளில் தனியார் மூலதனத்தை வரவேற்பது, அந்நிய நாட்டவங்கிகளில் கணக்குகளைத் தொடங்கிப் பணம் அனுப்புவதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்வது, மாநில அரசின் கட்டுப் பாட்டில் உள்ள துறைகளில் கட்டுப்பாட்டுடன் கூடியமுதலீடுகளை அனுமதிப்பது, குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்றுமதி-இறக்குமதித் தடைகளைத் தளர்த்துவது, மையப்படுத்தப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின்செயல்பாட்டை அதிகாரப் பகிர்வுசெய்வது, பாதி அளவுக்கு டாலர் மூலமாக வணிகத்தை ஏற்றுக் கொள்வது, சுற்றுலா, மருந்துகள், சக்தி மற்றும் எரிபொருள் ஆகிய துறைகளில் மூலதனங்களைவரவேற்பது எனப் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க முற்றுகையால் மின்சாரப் பற்றாக்குறை மற்றும் பொருட்கள் கிடைக்காமல் கடும் துயரத்தைச்சந்திக்கும் கியூபாவுக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு பெருகி வருகிறது. அர்ஜெண்டினா சூரிய ஒளித் தகடுகளைக் கொடுத்துமின் உற்பத்திக்கு உதவியுள்ளது; பிரேசில் 7.6 டிரில்லியன் மதிப்பிலான மருத்துவப் பொருட்கள் நிறைந்த கப்பலைஅனுப்பியுள்ளது. ரஷ்யா இரண்டு முறை மனிதாபிமான உதவியாக எண்ணெய் கப்பல்களை அனுப்பியுள்ளதுடன், கொலம்பிய ஜனாதிபதி கஸ்டாவோ பெட்ரோ தங்களாலான அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவாதம் அளித்துள்ளார். மெக்சிகோ உள்ளிட்ட பல நாடுகள் கியூபாவுக்கு ஆதரவாக நிற்கின்றன. இச்சீர்திருத்தங்கள் உற்பத்தியோடு இணைந்த, கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறமூலதனங்களாக இருக்கும் என்பதால், சோசலிசத்தின் பாலான ஒருமைப்பாட்டில் எந்தத்தளர்வும் இன்றி இவை நடைமுறைப்படுத்தப் படும். போராட்டத்திற்குப் பதிலாகப் பேச்சுவார்த்தை என்ற நிலைப்பாட்டையும் கியூப அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

1949-இல் புரட்சி நடத்திய மக்கள் சீனம், 1978-இல் மேற்கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மூலம் 2026-இல் அமெரிக்காவையே கடந்து செல்வதற்கான வெற்றிப்பாதையை உருவாக்கியுள்ளது. வியட்நாமும் இத்தகைய சீர்திருத்தங்கள் மூலம் தன்னிறைவை நோக்கிமுன்னேறியுள்ளது. அதுபோல, கடும் பொருளாதார நெருக்கடி, பட்டினி கொடுமை மற்றும் எரிசக்தி பற்றாக்குறையால் தவிக்கும் கியூப மக்களுக்கு இச்சீர்திருத்த நடவடிக்கைகள் உலக வளர்ச்சிப் பாதையில் கொண்டு போய் நிறுத்தும் என்பதில் எந்தசந்தேகமும் இல்லை.ஆகஸ்ட் 13, 2026 அன்று தோழர் பிடல் காஸ்ட்ரோவின் பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு பெறுகிறது.ஜனநாயகத்தையும் சோசலிசத்தையும் விரும்புகின்ற, அமைதியை முன்வைக்கின்ற அனைவரும் சர்வதேசஅரசியலில் சோசலிசத்திற்கு ஆதரவாகச் செயல்பட, கியூபாவுக்கு ஆதரவான இயக்கங்களில் நம்மை இணைத்துக் கொள்ள வேண்டும். பிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு விழாவைச் சிறப்புடன்கொண்டாடுவோம்! கியூபாவோடு ஒருமைப்பாட்டைத் தெரிவிப்போம்! போருக்கு எதிரான அமைதிக்கானஇயக்கங்களை வலுப்படுத்துவோம்!சோசலிச கியூபா வெல்லட்டும்!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.