முந்தய பக்கம்

லூப் சாலையில் மீனவர்கள் உண்ணாநிலை

3 hours before
லூப் சாலையில் மீனவர்கள் உண்ணாநிலை

லூப் சாலையில் மீனவர்கள் உண்ணாநிலை

முள்ளிக்குப்பம், சீனிவாசபுரம் மற்றும் முள்ளி மாநகரில் சர்வே எண் 4592 மற்றும் 4593 ஆகியவற்றில் பூர்வீகமாக வசிக்கும் மீனவ மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், பழுதடைந்த சீனிவாச புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை விரைவாக புதிதாக கட்டி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று (ஆக.3) லூப் சாலையில் மீனவர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். முள்ளி குப்பம் சீனிவாசபுரம் மீனவர்கள் நல சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், பகுதிக்குழு உறுப்பினர் வெ.ஜெயச்சந்திரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மயிலாப்பூர் பகுதி தலைவர் தினேஷ் குமார் உள்ளிட்ட பலர் ஆதரித்துப் பேசினர்.

Share
FacebookXWhatsAppTelegram