தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாதாபட்டணம் சற்குண சத்திய வித்யாலயா பள்ளியில் கல்வித் தந்தை தம்பதியர் உருவச் சிலை திறப்பு விழா

5 Aug 2026, 9:52 pm
மாதாபட்டணம் சற்குண சத்திய வித்யாலயா பள்ளியில் கல்வித் தந்தை தம்பதியர் உருவச் சிலை திறப்பு விழா

மாதாபட்டணம் சற்குண சத்திய வித்யாலயா பள்ளியில் கல்வித் தந்தை தம்பதியர் உருவச் சிலை திறப்பு விழா

தென்காசி,ஆக. 5-தென்காசி மாவட்டம், மாதாபட்டணம் ச.ச.வி. மேல்நிலைப்பள்ளியில் கல்வித் தந்தை தம்பதியரின் திருஉருவச்சிலை திறப்பு விழா பள்ளித் தாளாளர் டாக்டர் சி.எஸ்.ரெக்ஸ் சற்குணம் (எம்.டி., டி.சி.எச்.) தலைமையில்நடைபெற்றது.

மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் மேதகு எஸ். அந்தோணி சாமி சவரிமுத்து (டி.டி., டி.சி.எல்.) கல்வித் தந்தைதம்பதியரின் உருவச் சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் பேரருள் தந்தை எம்.மோட்சராஜன், அருட்தந்தை சி. தீபக் மைக்கேல் ராஜா, அருட்தந்தை டி. சேவியர் தேவசகாயம், அருட்தந்தைவி.கே.எஸ். அருள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா ஏற்பாடுகளை பள்ளியின் நிர்வாக செயலர்அருட்தந்தை எஸ்.ஏ. அந்தோணிசாமி செய்திருந்தார். இந்நிகழ்வில் பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள்,ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள், மாணவ-மாணவியர்கள் மற்றும் ஏராளமான ஊர்மக்கள்கலந்து கொண்டு கல்வித் தந்தை தம்பதியருக்கு மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயலாளர் உச்சிமாகாளி ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணசீலன், தங்கம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆசிரியர் மாரியப்பன், மேனகா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.