மாதவரம் எம்.எம்.சி. சாலையை விற்பனை மண்டலமாக அறிவித்திடுகசிறுகடை வியாபாரிகள் கோரிக்கை
3 hours before

மாதவரம் எம்.எம்.சி. சாலையை விற்பனை மண்டலமாக அறிவித்திடுகசிறுகடை வியாபாரிகள் கோரிக்கை

சென்னை, ஆக. 3-மாதவரம் கால்நடை யுனிவர்சிட்டி எம்.எம்.சி. சாலையை விற்பனை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என சாலையோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மாவட்ட சாலையோர சிறுகடை விற்பனையாளர்கள் சங்கத்தின் மாதவரம் கால்நடை யுனிவர்சிட்டி எம்.எம்.சி. சாலை முதலாம் ஆண்டு பேரவை தலைவர் கே.சி.ஏ.கருத்திருமன் தலைமையில் திங்களன்று (ஆக.3)நடைபெற்றது. பி.லீமா ரோஸ் அஞ்சலி தீர்மா னத்தை வாசித்தார். மாவட்டச் செயலாளர் டி.வெங்கட் பேரவையை துவக்கி வைத்து பேசி னார். சட்ட ஆலோசகர் வீ.ஆனந்தன், அருள் நகர் செயலாளர் பி.ராஜன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினார். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் பேரவையை நிறைவு செய்து பேசினார். முன்ன தாக எஸ்.முருகன் வர வேற்றார். சுரேஷ் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்குடிநீர், கழிப்பறை வசதி செய்து கொடுக்க வேண்டும், அத்தியாவசிய தேவைக்காக சாலை யோர கடைகளை அப்புறப் படுத்தும் போது, மாற்றுஇடம் வழங்கி விட்டு அப்புறப்படுத்த வேண்டும்,

வியாபாரம் செய்யும் அனை வருக்கும் மாநகராட்சி தள்ளு வண்டிகள் வழங்க வேண்டும், சாலையோர வியாபாரிகளுக்கு நிரந்தர வியாபார இடங்களை ஒதுக்கி, அவற்றை முறைப்படுத்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.புதிய நிர்வாகிகள்கவுரத்தலைவராக எஸ்.கே.மகேந்திரன், தலை வராக எஸ்,முருகன் செய லாளராக வி.சுரேஷ், பொருளாளராக எஸ்.வீரப்பன் உள்ளிட்டு 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.