தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களின் வீடுகள் இடிப்பு

yesterday
ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களின் வீடுகள் இடிப்பு

ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களின் வீடுகள் இடிப்பு

போபால்மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சிநடைபெற்று வருகிறது.முதலமைச்சராக ரியல் எஸ்டேட் ஊழலுக்குப் பெயர் பெற்ற மோகன்யாதவ் உள்ளார்.

இந்நிலையில், மத்தியப் பிரதேச தலைநகர் போபால் அருகே உள்ள ஐஷ்பாக் பகுதியில் அமைந்துள்ள சுமார் 599 வீடுகளைக் கொண்ட ‘ஜனதா குடியிருப்புகளை’ இடிக்கும் பணியைஅம்மாநில பாஜக அரசு திங்களன்று தொடங்கியது. காலை 7 மணியளவில் தொடங்கிய இந்த வீடுகள்இடிப்புப் பணியில் 10 பொக்லைன், 50 ஜேசிபி இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஐஷ்பாக் பகுதியில் முஸ்லிம் மக்கள் கணிசமாக வாழ்ந்து வரும் நிலையில், இடிக்கப்பட்ட 599 வீடுகளில் 95% முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமானது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மழுப்பல் காரணம்வீடுகள் இடிப்பு தொடர்பாக போபால் மாவட்ட அதிகாரிகள் கூறுகையில்,“இடிக்கப்படும் வீடுகள் 1980 காலகட்டத்தில் கட்டப்பட்டவை ஆகும். 40 ஆண்டு காலப் பழமையானவை. அதனால் கட்டடங்களின் மோசமான நிலை

யைக் கருத்தில் கொண்டு, பாழடைந்தவை என அறிக்கை வெளியிடப்பட்டு இடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது” என மழுப்பலாகக் கூறியுள்ளனர்.

மாற்று இடம் ஒதுக்கவில்லைஐஷ்பாக் பகுதியைச் சேர்ந்த ரஷீத் என்பவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்,”6 ஆண்டுகளுக்கு முன்பு நோட்டரி ஒப்பந்தம் மூலம் இங்கு ஒரு வீட்டை வாங்கினேன். ஆனால் அதிகாரிகள் திடீரென நோட்டீஸ் அனுப்பி இடித்துவிட்டனர். எனக்கு மாற்று இடம் எதுவும் வழங்கவில்லை. எனது குடும்பம் தங்குவதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.

தப்பிய ஒரு வீடுமொத்தம் 600 வீடுகளை இடிக்க மத்தியப் பிரதேச அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனை எதிர்த்து முகமது ஹபீஸ்கான் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், ஹபீஸ் கானுக்கு மட்டும் நிவாரணம் (வீட்டை இடிக்கஇடைக்காலத் தடை) வழங்கிய நீதிமன்றம், ஒட்டுமொத்த இடிப்புப் பணிக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இதனால் 599 வீடுகள் இடிக்கப்பட்டன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.