தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

yesterday
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வேட்புமனுக்கள் பரிசீலனை மற்றும் வேட்புமனு திரும்பப்பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டின் இரு தொகுதிகளில் வரும் அக்.6-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, கடந்த செப்.17-ஆம் அன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இன்று (செப். 19) வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிழலில் இடைதேர்த்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மதுராந்தகம் தொகுதியில் 28 பேரின் வேட்புமனு ஏற்கப்பட்ட நிலையில் ஒருவர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றதால், தற்போது 27 பேர் போட்டியிடுகின்றனர். தாராபுரம் தொகுதியில் 14 சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 22 பேர் போட்டியிடுகின்றனர்.

மதுராந்தகத்தில், தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி.சுகந்தி, நாதக சார்பில் ஜானகிராமன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

தாராபுரத்தில், தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பி.லட்சுமணன், நாதக சார்பில் கார்த்திகா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.