மோடியின் நண்பர் அதானிக்கு தாராளம்! 83,800 சதுர அடி வன நிலத்தை விடுவித்த மகாராஷ்டிரா பாஜக அரசு
13 Aug 2026, 9:29 pm

மோடியின் நண்பர் அதானிக்கு தாராளம்! 83,800 சதுர அடி வன நிலத்தை விடுவித்த மகாராஷ்டிரா பாஜக அரசு

மும்பைமகாராஷ்டிராவில் பாஜககூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட்டில் உள்ள அதானி சிமெண்டேஷன் நிறுவன முனையத்திற்காகஅடர்ந்த காடு மற்றும் அலையாத்தி (மாங்குரோவ்) பகுதியில் 70,000 சதுரஅடியும், அமராவதியில் எரிவாயுகுழாய்க்காக 13,800 சதுர அடி வன நிலங்களையும் அம்மாநிலஅரசு அதானிக்காக தாரைவார்த்துள்ளது.

அதாவது அதானி சிமெண்ட் பெருந்தொகுதி முனையத்திற்காக ராய்காட் மாவட்டம் அலிபாக் தாலுகாவில் உள்ளஷாபூர் மற்றும்ஷாபாஜ் கிராமங்களில் 0.6497 ஹெக்டேர் அல்லது 69,933 சதுர அடிபரப்பளவுள்ள அதிக மரங்களைக்கொண்ட காடு, அலையாத்தி காடு மற்றும் ஓடை அலையாத்தி காடு நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. அதே போல அதானி டோட்டல்கேஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 0.1281 ஹெக்டேர் அல்லது சுமார்13,788 சதுர அடி ஒதுக்கப்பட்ட மற்றும் அடையாளம் காணப்பட்ட வன நிலத்தை மாற்ற அரசு ஒப்புதல்அளித்துள்ளது. அமராவதி நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இயற்கை எரிவாயு விநியோக வலையமைப்பை அமைப்பதற்காக நிலத்தடியில் எஃகு குழாய்களைப் பதிப்பதற்கு கூடுதலாக அதானி நிறுவனம் நிலத்தை கையகப்படுத்த உள்ளதாகவும் செய்திகள்வெளியாகியுள்ளன.