தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பசுவின் பெயரால் மனிதம் புதைக்கப்படும் அவலம்!

28 Aug 2026, 8:04 pm
பசுவின் பெயரால் மனிதம் புதைக்கப்படும் அவலம்!

பசுவின் பெயரால் மனிதம் புதைக்கப்படும் அவலம்!

மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பரமேசுவர் சுஹாஸ் ஹீவாலே மற்றும்அவரது இளைய மகன் மீது ‘பசுப் பாதுகாவலர்கள்’ என்ற முகமூடியணிந்த மதவெறியர்கள் நடத்திய கொடூரத்தாக்குதல், ஒட்டுமொத்த நாகரிக சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. கால்நடைச் சந்தையில் முறைப்படி காளையை விலைக்கு வாங்கிய ஆவணங்களைச் சமர்ப்பித்தும், சாதியைக் கேட்டுத் திட்டியதோடு, வலுக்கட்டாயமாக வாயில் சாணத்தைத்திணித்து, அதை வீடியோவாகப் பதிவு செய்து மிரட்டியுள்ளனர். பாதிக்கப்பட்டவர் புகார் அளிக்க அஞ்சி நடுங்கும் சூழலை ஏற்படுத்திய இந்த வன்முறை, பாஜக ஆளும் மகாராஷ்டிராமாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை முற்றிலுமாகக் கேலிக்குள்ளாக்குகிறது.

வாயில் சாணத்தைத் திணிக்கும் கொடுமையை காவல்துறையிடம் சொன்னால் குடும்பத்தினரை கொன்றுவிடுவதாகவும் பசுக் குண்டர்கள்மிரட்டியுள்ளனர். கடுமையான போராட்டத்திற்குப் பின்னரே அடையாளம் காணப்பட்ட ஆறு பேர் மீது,வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ்காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இது ஏதோ ஒரு தனிப்பட்ட வன்முறைச் சம்பவம் அல்ல; மாறாக, ஆர்.எஸ்.எஸ்.,விஸ்வ இந்து பரிசத் மற்றும் பஜ்ரங் தளம் போன்ற சங்பரிவார் அமைப்புகளின் தொடர்ஆசீர்வாதத்துடன் நாடு முழுவதும் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை அரசியலின் நீட்சியாகும்.பசுப் பாதுகாப்பு என்ற போர்வையில் சிறுபான்மையினரையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் குறிவைத்துத் தாக்குவதும், படுகொலை செய்வதும் வழக்கமாக்கப்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் தாத்ரி முதல் ஜார்க்கண்ட், ஹரியானா, உத்தரப்பிரதேசம் வரை நூற்றுக்கணக்கான அப்பாவிகள் இதே போன்றுபசுக் குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். முகமது அக்லக் முதல் ரக்தாமுல்லா கான் வரை மாட்டுக்கறி வைத்திருப்பதாகக் கூறி மனித உயிர்களைப் பறித்த மதவெறிக்கும்பல்கள், இன்று தலித் மக்களின் மீதும் தங்கள் சாதிய வன்மத்தைக் கக்குகின்றன. பசுக்களைமுன்னிறுத்தி மனித உயிர்களைத் துச்சமாக மதிக்கும் இந்த வக்கிர புத்தி, சகிப்புத்தன்மையற்ற பாசிசக் கலாச்சாரத்தை நாட்டில் வேரூன்றச் செய்கிறது.

சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று காவல்துறை கூறினாலும், குற்றவாளிகள் மீது உடனடிகைது நடவடிக்கை எடுக்கப்படாதது குற்றவாளிகளுக்கு துணிவை ஊட்டுவதாகும். ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான இத்தகைய அடக்குமுறை கண்டிக்கத்தக்கது. மனிதநேயத்தைப் புதைத்துவிட்டு, மதவெறியை விதைத்து அரசியல் ஆதாயம் தேடும் காவிக் கும்பல்களின் கோரமுகத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதோடு, குற்றவாளிகளுக்குச் சமரசமற்ற உச்சபட்ச தண்டனை பெற்றுத் தருவதே வன்முறையால் பாதிக்கப்படும் எளிய மக்களுக்குச் செய்யும் உண்மையான நீதியாகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.