மகாத்மா பிறந்த நாள்: மக்கள் ஒற்றுமை உறுதிமொழி ஏற்பு
2 hours before

மகாத்மா பிறந்த நாள்: மக்கள் ஒற்றுமை உறுதிமொழி ஏற்பு

திருப்பூர், அக்.2-மகாத்மா காந்தியடிகளின் 157 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மத நல்லிணக்கம் மற்றும் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளியன்று பரவலாக நடைபெற்றது.

திருப்பூர் காந்தி நகரில் உள்ள சர்வோதயா சங்க வளாகத்தில் காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.ஆர்.கணேசன், வடக்கு கிளைத் தலைவர் த.காளிதாஸ், செயலாளர் பொன்.பாலகுமாரன், பாலர் பூங்கா பொறுப்பாளர்கள் பி.லட்சுமி, ர.கௌசல்யா ஆகியோர் பாலர் பூங்கா குழந்தைகளுடன் இணைந்து இதில் கலந்துகொண்டனர். மதநல்லிணக்க உறுதியேற்பு நிகழ்வுநடைபெற்றது. உடுமலைப்பேட்டை குட்டைத்திடலில் காந்தியடிகளின் சிலைக்கு தமுஎகச-வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில்சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் ராஜா, கிளைச் செயலாளர் துரையரசன்உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

அறிவியல் இயக்கம்

இதேபோன்று, பெருமாநல்லூர் செல்வ மகாலில், தமிழ்நாடு அறிவியல்இயக்க திருப்பூர் வடக்கு ஒன்றியம் சார்பில் குழந்தைகள் ஒற்றுமை விழா மற்றும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை பெருமாநல்லூர் பொறுப்பு காவல் ஆய்வாளர் தவசியப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசு தலைமையில், காந்தியடிகளின் வேடம் அணிந்த குழந்தைகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தருமபுரி

சமூக நல்லிணக்க மேடை சார்பில் தருமபுரி எஸ்.வி.சாலையில் உள்ள காந்தியின் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, சோ.அருச்சுணன், விசிக கருத்தியல் பரப்புமாநில அமைப்பாளர் பொ.மு.நந்தன், முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் சிராஜூதீன், மாதர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி எஸ்.கிரைசாமேரி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

கோவை

சிறுபான்மை மக்கள் நலக் குழு மற்றும் கோவை மக்கள் ஒற்றுமை மேடை இணைந்து ரத்தினபுரியில் நடத்தியநிகழ்வில், காந்தியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சிறுபான்மை மக்கள் நலக்குழுமாவட்டத் தலைவர் ஜெரோம் ரோட்ரிக்ஸ் தலைமை வகித்தார். மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.கனகராஜ், சிறுபான்மை மக்கள் நலக்குழு பொறுப்பாளர் என்.ஆர்.முருகேசன், பாஸ்டர் மேனுவேல் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

ஈரோடு

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மற்றும் சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக மகாத்மா பிறந்த தின நிகழ்ச்சி ஈரோடு, மூலப்பாளையத்தில் நடைபெற்றது. மூத்த தோழர் கே.துரைராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அமைப்புகளின் நிர்வாகிகள் பி.மாரிமுத்து, சி.பரமசிவம், கே.ராஜ்குமார், சி.முருகேசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.