மணலி - எண்ணூர் - திருவொற்றியூர் பகுதியை “தொழில்துறை சுகாதார தாக்க மண்டலம்” மாக அறிவித்திடுக வடசென்னை குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்
2 hours before

மணலி - எண்ணூர் - திருவொற்றியூர் பகுதியை “தொழில்துறை சுகாதார தாக்க மண்டலம்” மாக அறிவித்திடுக வடசென்னை குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்

சென்னை, செப். 20-வடசென்னை குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் “மணலி மண்டலம் வளம், வாழ்வு மற்றும்வளர்ச்சிக்கான மக்கள் மாஸ்டர் பிளான்” என்ற தலைப்பில் மக்கள் கூடுகை நிகழ்ச்சி மணலி பெரிய தோப்பில்வழக்கறிஞர் ஏ.வி.ஜெயகிருஷ்ணா தலைமையில் ஞாயிறன்று (செப். 20) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 10 தலைப்புகளில் மணலி மண்டலத்துக்கான மக்கள் மாஸ்டர் பிளான் உருவாக்கப்பட்டது. 20க்கும் அதிகமான குடியிருப்போர் நலச் சங்கங்களில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டமைப்பின் தலைவர் டி.கே.சண்முகம் துவக்கி பேசுகையில், மணலி வளர்ச்சி பெற்றால், வடசென்னை வளர்ச்சி பெறும். ஆனால்

மணலியின் இன்றைய நிலைமை என்ன? 2020 - 23இல் தேசிய பசுமை தீர்ப்பாய குழு ஒன்று மணலி மற்றும் எண்ணூர் மக்களின் உடல்நல பாதிப்புகள் குறித்த மதிப்பீட்டை செய்ய வேண்டும் என வற்புறுத்தியது.

இந்த கவுன்சில் மணலி – எண்ணூர் தொழிற்பகுதி இன்னும் எவ்வளவு தொழில் மாசுச்சுமையைத் தாங்க முடியும்

என்ற ஆய்வை செய்ய வேண்டும். இந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகளின் முழுமையான பாதுகாப்பு ஆய்வு உறுதிப்படுத்த வேண்டும். அமோனியா, எரிவாயு, எண்ணை கசிவு போன்ற விபத்துகளின்போது மக்களைப் பாதுகாப்பதற்கான அவசரகாலப் பதிலளிப்பு மையம் அமைக்க வேண்டும்.

காற்று, நீர், ஒலி மாசு ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கழிமுகம், கால்வாய், நீர்நிலைகள் மற்றும்சுற்றுச்சூழல்அமைப்புகளை மீட்டெடுத்தல். அரசின் திட்டத்தில் உள்ளூர் மக்களுக்கான மருத்துவ முகாம்கள் மற்றும் பேரிடர் மீட்பு மாதிரி பயிற்சிகள் என மிக முக்கியமாக 7முன்னுரிமைவிஷயங்களை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியது.

மணலி - எண்ணூர் மீட்டமைப்பு மற்றும் புத்தமைப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது முதல் இன்றுவரை மணலி எண்ணூர் மக்களை பாதுகாக்க எத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டது என்ற வெள்ளை அறிக்கையை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட வேண்டும்.மணலி - எண்ணூர் - திருவொற்றியூர் பகுதியை “தொழில்துறை சுகாதார தாக்க மண்டலம்” மாக அறிவித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இந்த தொழிற்சாலைகளின் சிஎஸ்ஆர் நிதிமுழுவதையும் மணலி எண்ணூர் மக்களின் வளர்ச்சிக்கும், உடல்நலபாதுகாப்புக்கும் பயன்படுத்த வேண்டும். இந்த தொழிற்சாலைகளில் உள்ளூர் மக்களுக்கு போதுமான வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். இந்த ஆபத்தான தொழிற்சாலைகளின் வேலைவாய்ப்பு குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்.

இதில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், ஜெ.அழகர், எம்.ஏ.குமரன், எஸ்.ரவி, சி.வசந்தகுமார்,பி.அருண்குமார், லயன் சுரேஷ், மாத்தூர் பாண்டியன் ஆகியோரும் பேசினர். முன்னதாக நிர்வாகிகள்நாகப்பன், வானவன், கோவிந்தராஜ் ஆகியோர் கோரிக்கைகளை முன்மொழிந்து பேசினர். முன்னதாகஇணைச்செயலாளர் எ.துரைராஜ் வரவேற்றார். பக்தவச்சகம் நகர் குடியிருப்போர் சங்கத்தின் தலைவர் பி.விநாயகம் நன்றி கூறினார்.

கோரிக்கைகள்மணலி மண்டலத்தின் மழைநீர் கால்வாய்கள், நீர்வழிகள், குளங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளை முழுமையாக ஆய்வு செய்து,ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாய்களைத் தூர்வாரி, மழைநீர் தடையின்றி வெளியேறும் வகையில் மணலிக்கான ஒருங்கிணைந்த வெள்ளத் தடுப்பு மற்றும் நீர்வழிப்பாதுகாப்பு திட்டம் உருவாக்க வேண்டும். விம்கோ நகர் மெட்ரோமுதல் எண்ணூர் வரையும், எண்ணூர் முதல் மணலி நியூ டவுன் வழியாக மாதவரம் மெட்ரோ முனையம் வரை மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்தி போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வுவேண்டும். சட்டவிரோதமாக சாலைகளில் நிறுத்தப்படும் கன்டெய்னர் லாரிகளை அப்புறப்படுத்தி, துறைமுகப் போக்குவரத்துக்கான மாற்றுப் பாதைகளை உருவாக்க வேண்டும். ஆண்டுக்கணக்கில் முடங்கியுள்ள மணலி புதுநகர் – சடையங்குப்பம் – ஜோதி நகர் இணைப்புச் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

கழிவுநீர் இணைப்பு இல்லாத குடியிருப்பு பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டத்தை உருவாக்க வேண்டும். 100படுக்கைகள், பரிசோதனை, ஸ்கேன், இசிஜி உள்ளிட்ட வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள மாத்தூர் நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையை முழுமையான மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை உடனடியாக வழங்க வேண்டும்.மணலி புதுநகர் உள்ளிட்ட குடிநீர் தேவைப்படும் குடியிருப்பு பகுதிகளுக்கு தினசரி குடிநீர் வழங்க வேண்டும்.மக்கள் தொகைமற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு ஏற்ப மின்சாரக் கட்டமைப்பை மேம்்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட கோனோகார்பஸ் மரங்களை உடனடியாக அகற்றி, அதற்குப் பதிலாக நாட்டு மரங்களை நட வேண்டும்.மணலி மண்டலத்தில் பட்டா வழங்க தகுதியான அனைத்து குடியிருப்புகளுக்கும் நிலவகை மாற்றம் செய்து பட்டாவழங்க வேண்டும்.

மணலி தொழிற்சாலைகள் மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். பெரிய மாத்தூர் பக்தவச்சலு நகர் காமராஜர் சாலையில் உள்ள மசாலா தொழிற்சாலையால் ஏற்படும் கடுமையான நெடி குறித்துமக்களின்எழுத்துப்பூர்வ ஆட்சேபனைகளையும், மாநகராட்சி முன்வைத்த நிபந்தனைகளையும் பொதுமக்களுக்கு வெளிப்படையாக விளக்க வேண்டும்.

அருகிலுள்ள கேன்சர் மருத்துவமனை நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவகையில், அந்த தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.மணலி உள்ளிட்ட வடசென்னை மக்களின் உடல் நலம், சுற்றுச்சூழல்மற்றும் எதிர்கால தலைமுறையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கொடுங்கையூர் எரிஉலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.