மதுராவில் கார் - லாரி மோதல்2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி
yesterday
<p><strong>மதுராவில் கார் - லாரி மோதல்2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி</strong></p><p>உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தின் சட்டிகாரா பகுதியில் உள்ள ராம் தர்மகாந்தா அருகே திங்களன்று காலை கார் - கண்டெய்னர் லாரி நேருக்குநேர் மோதிக் கொண்டன. காரில் நான்கு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பயணித்துள்ளனர்.இந்நிலையில், இந்த கோர விபத்தில்காரில் பயணித்த 2 குழந்தைகள் உட்பட4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 5 பேர் மதுராஅருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பலியான மற்றும் காயமடைந்த அனைவரும் மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள் என்றும், ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் காரை ஓட்டியதே விபத்துக்குக் காரணம்என மதுரா மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் ஸ்லோக் குமார் கூறியுள்ளார்.</p>
