மேகதாட்டு : தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு
29 Jul 2026, 10:39 pm

மேகதாட்டு : தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு

காவிரி ஆறு நீர் ஆதாரம் மட்டுமல்ல; அது தமிழகத்தின் கோடிக்கணக்கான விவசாயிக ளின் உயிர்நாடி. எனவே, மேகதாட்டு விவகாரத் தில் நாடாளுமன்றத்தில் ஒன்றிய ஜல்சக்தித் துறை இணை அமைச்சர் அளித்த பதில், தமிழ கத்தின் உரிமைகளுக்கும் கூட்டாட்சித் தத்து வத்திற்கும் விடப்பட்ட பகிரங்க சவாலாகும்.

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாட்டு அணையைக் கட்டத் துடிப்பதன் பின்னணியில் உள்ள சட்டவிரோத எண்ணங்க ளை, மத்திய நீர்வள ஆணையத்தின் சமீபத்திய கடிதம் அம்பலப்படுத்தியுள்ளது. 2019-ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட திட்ட அறிக்கையை மாற்றியமைத்து, பெங்களூரு நகருக்குக் கோ ரப்பட்ட 4.75 டி.எம்.சி நீரை 6.95டி.எம்.சியாக கர்நாடகா உயர்த்தியிருப்பதை மத்திய நீர்வள ஆணையம் நிராகரித்துள்ளது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடகா விற்கு ஒதுக்கப்பட்ட அளவை விடக் கூடுதல் நீரைப் பயன்படுத்த முடியாது என்றும், 60 டி.எம்.சி நீரைத் தேக்கும் அணையின் தேவைக்கான உரிய தரவுகள் இல்லை என்றும் தெளிவுபடுத்தி யுள்ளது.

இந்நிலையில், “உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தவே அணை கட்டுகிறோம்” என்ற கர்நாடகாவின் கூற்று அப்பட்டமான பொய் என் பதும், தமிழகத்தின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மை என்பதும் உறுதியாகியுள்ளது. இருப்பி னும் ஒன்றிய ஜல்சக்தித் துறை இணை அமைச்சர், “காவிரியில் அணை கட்ட கீழ்நிலை மாநிலங்களின் ஒப்புதல் தேவை என 2018 உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை” எனத் தெரிவித்திருப்பது அநீதியானது.

1991-ஆம் ஆண்டின் குடியரசுத் தலைவர் சுற்றறிக்கை மற்றும் 2018 உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு ஆகியவை, “மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறு பொதுச் சொத்து; மேல்நிலை மாநிலம், கீழ்நிலை மாநிலத்திற்கு உரிய நீர் விநியோகத்தைப் பாதிக்கும் எந்தக் கட்டுமா னத்தையும் தன்னிச்சையாக மேற்கொள்ளக் கூடாது” என்பதை மிகத் தெளிவாக வலியுறுத்துகின்றன.

சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழுவே தமி ழகத்தின் ஒப்புதல் இன்றி மேகதாட்டு திட்டத்தைப் பரிசீலிக்க முடியாது எனக் கூறியுள்ள நிலையில், சட்டத்தின் ஒரு பகுதியை மட்டும் பிடித்துக்கொண்டு ஒன்றிய அரசு குழப்பத்தை விளைவிக்க முயல்வது நடுநிலையான செயல் அல்ல.

காவிரி நீர் என்பது தமிழ்நாட்டு மக்க ளின் வாழ்வாதாரப் பிரச்சனை. எனவே, நாடாளு மன்றத்தில் மத்திய அமைச்சர் அளித்த தவ றான மற்றும் குழப்பமான பதில் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும். காவிரி நடுவர் மன்ற மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முர ணாக உள்ள மேகதாட்டு திட்டத்திற்கு எவ்வித சட்டப்பூர்வ அல்லது நிர்வாக அனுமதியையும் வழங்கக் கூடாது; தமிழகத்தின் உரிமைகள் முழுமையாக உறுதி செய்யப்பட வேண்டும்.