மேல்மருவத்தூர் ரயில் நிலைய கோரிக்கைகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு போராட்டம் ஒத்திவைப்பு
yesterday
<p><strong>மேல்மருவத்தூர் ரயில் நிலைய கோரிக்கைகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு போராட்டம் ஒத்திவைப்பு</strong></p><p>செங்கல்பட்டு, ஆக.14-மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்வதுடன் மின்சார ரயில் சேவையைநீட்டிக்க வேண்டும் மற்றும் சோத்துப்பாக்கம் மேம்பாலப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை (ஆக.15)அன்று நடத்தவிருந்த சத்தியா கிரகப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டுள்ளது.மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் நரேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சோத்துப்பாக்கம் ரயில்வே மேம்பாலப் பணிகள் செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் தொடங்கும் என்றும், பார்க்கிங் வசதிக்காக நிலம் கையகப்படுத்தும் பரிந்துரை அரசின் கவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில்கள் நின்று செல்வது மற்றும் மின்சார ரயில் நீட்டிப்பு தொடர்பான கோரிக்கைகள் தெற்கு ரயில்வே பொது மேலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.</p><p>இதன் அடிப்படையில் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக மாணவர், வாலிபர், மாதர் சங்கங்கள், மேல்மருவத்தூர் ரயில் பயணிகள் சங்கம் மற்றும் சோத்துப்பாக்கம் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர். செப்டம்பர் இறுதிக்குள் பணிகள் தொடங்கவில்லை என்றால் போராட்டம் மீண்டும் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் எம். வெள்ளிக்கண்ணன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ச. ஜீவானந்தம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி. ஜெயந்தி, சித்தாமூர் ஒன்றியச் செயலாளர் நவரத்தினம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் எஸ். ஸ்டாலின்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
