மேட்டூர் அணையில் நீர்மட்டம் சரிவு: சம்பா சாகுபடிக்கு அக்.14 வரை மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் சூழல்
1 hour before

மேட்டூர் அணையில் நீர்மட்டம் சரிவு: சம்பா சாகுபடிக்கு அக்.14 வரை மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் சூழல்

சென்னை, அக். 6- மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருவதால், காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்குஇன்னும் 10 நாட்களுக்கு (அக். 14 வரை) மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது டெல்டா விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள்கிழமை மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.5 அடியாகவும், நீர் இருப்பு 34.046டி.எம்.சி.யாகவும் குறைந்துள்ளது. அணையின் இருப்பு 20டி.எம்.சி.யாகச்சரியும் வரை மட்டுமே பாசனத்திற்கு நீர் திறக்க இயலும்என்பதால், தற்போது வினாடிக்கு 15,000 கனஅடி நீர்வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாவிட்டால், அக்டோபர் 14 முதல் பாசனத்திற்கான நீர்திறப்பு நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 1,200 முதல் 1,500கனஅடி வரை குறைக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கர்நாடகா அரசு தனதுஉரியப் பங்கை வழங்காததேஇந்த நீர் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணமாகும். ஜூன் முதல் அக்டோபர் 1வரை கர்நாடகா 123.7 டி.எம்.சி நீரைத் திறந்திருக்க வேண்டும், ஆனால் 44.4டி.எம்.சி மட்டுமே திறந்துள்ளது; இதனால் 79.3 டி.எம்.சி நீர் நிலுவையில் உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் மீறி பிலிகுண்டுலுவில் தற்போது வினாடிக்கு 1,424 கனஅடி நீர் மட்டுமே வருகிறது.

இது குறித்துத் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலாளர் சுவாமிமலை எஸ். விமல்நாதன் கூறுகையில், “கடைமடை வரை தண்ணீர் சென்றுவிட்டதாக அதிகாரிகள் கருதுவது கள நிலவரத்திற்கு மாறானது. ஏ-வாய்க்கால்களிலேயே தண்ணீர் முழுமையாகச் செல்லாத நிலையில், பி, சி, டி கிளை வாய்க்கால்கள் காய்ந்து கிடக்கின்றன. அக்டோபர் மூன்றாவது வாரத்தில் நாற்று நடவுக்குத் தண்ணீர்தட்டுப்பாடு ஏற்பட்டால், பயிர்கள் கருகிவிவசாயிகள் பெருத்த நஷ்டத்தைச் சந்திப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.