மிலாடிநபி : கோவையில் 2,000 கிலோ அரிசியில் நெய் சோறு வழங்கல்
10 hours before

மிலாடிநபி : கோவையில் 2,000 கிலோ அரிசியில் நெய் சோறு வழங்கல்

கோவை, ஆக. 26 -இஸ்லாமியர்களின் இறைத்தூதரான நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் மிலாடி நபியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நநாளில் நபிகள் நாயகத்தின் புகழையும் ஈகை பண்பையும் பொதுமக்களிடையே எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

ஏழை எளிய மக்களின் பசியை ஆற்ற வேண்டும் என்பது இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்ட முக்கிய உத்தரவாகக் கருதப்படுகிறது. அதன்படி, பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ‘தப்ருக்’ எனப்படும் உணவு வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. கோவையில் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியில் சுன்னத் ஜமாத் சார்பில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உண்ணும் அளவிற்கு நெய் சோறு சமைக்கப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டது.

பொதுமக்களின் வரவேற்பு

ஆண்கள் மற்றும் பெண்கள் எனத் தனித்தனியாக வரிசைகள் அமைக்கப்பட்டு காலை முதலே உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில் அப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை புரிந்து நெய் சோற்றை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். கடந்த பத்து ஆண்டுகளாகச் சுன்னத் ஜமாத் சார்பில் இலவசமாக நெய் சோறு வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 11-வது ஆண்டாக இன்றும் இந்நிகழ்வு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 2,000 கிலோ அரிசியில் இந்த நெய் சோறு சமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.