தமிழ்நாட்டை நோக்கி வரும் தொழில் முதலீடுகள் அமைச்சர் அருண்ராஜ் பேட்டி
1 hour before

தமிழ்நாட்டை நோக்கி வரும் தொழில் முதலீடுகள் அமைச்சர் அருண்ராஜ் பேட்டி

கோவை, ஜூலை 31-உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் விவகாரத்தில் மாநில உரிமைகளுக்காகவும் அரசுமருத்துவர்களின் நலனுக்காகவும் உச்ச நீதிமன்றத்தில் போராடி முக்கிய ஆணையை பெற்றுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ்தெரிவித்தார்.கோவை விமான நிலையத்தில் வெள்ளியன்று அமைச்சர் அருண்ராஜ் மற்றும் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அருண்ராஜ் கூறுகையில், கடந்த ஆட்சிக்காலத்தில் உயர் மருத்துவ இடங்கள் ஒன்றியத் தொகுப்பிற்கு எவ்வித நிபந்தனையுமின்றி சரண்டர் செய்யப்பட்டன. கட்-ஆஃப் மதிப்பெண் அதிகமாக இருந்ததால், தமிழ்நாட்டைச் சேர்ந்த சேவைமருத்துவர்களுக்கு சேர்க்கை கிடைக்கவில்லை. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தீவிரமாக வாதாடியது.அவமதிப்பு வழக்குகளை சந்தித்தபோதும், மாநில உரிமைகளுக்காகதொடர்ந்து போராடினோம். அதன் விளைவாக, ’ஒன்றியகவுன்சிலிங்கில் கட்-ஆஃப் மதிப்பெண்ணை குறைக்கக் கூடாது; ஒருவேளை கட்-ஆஃப் குறைக்கப்பட்டால், அந்தஇடங்களை மீண்டும் மாநிலத் தொகுப்பிற்கே திருப்பி வழங்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், இந்த இடங்களை மாநிலத் தொகுப்பு வாயிலாக மட்டுமே நிரப்ப வேண்டும் என்பதே அரசின் நிலையான கோரிக்கையாகும்.கடந்த ஆட்சியில் மக்கள் போராட்டங்களால் முதலீடுகள் பக்கத்து மாநிலத்திற்கு செல்லவில்லை; தற்போதைய அரசின் நேர்மையான மற்றும்வெளிப்படையான நிர்வாகத்தின் காரணமாக, புதிய முதலீடுகள் தானாகவே தமிழ்நாட்டை நோக்கி வரத்

தொடங்கியுள்ளன. தமிழ்நாடு விரைவில் தொழில் முதலீட்டில் தலைசிறந்த மாநிலமாகஉருவெடுக்கும். அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பற்றாக்குறையைப் போக்க மாவட்ட நிர்வாகம் மூலம்நியமனம் செய்ய

முற்பட்டபோது நீதிமன்ற தடை பெறப்பட்டது. இருப்பினும், செவிலியர்களின் நலனைகருத்தில் கொண்டு, இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சருடன் ஆலோசித்து விரைவில் நல்ல முடிவுஎடுக்கப்படும்.மேகதாது அணையைக் கட்டும் விவகாரத்தை பொறுத்தவரை, அங்கு ஒரு செங்கலைக்கூட வைக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று முதலமைச்சர் தெளிவாக கூறியுள்ளார். அதற்குரிய காலத்தில், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை நிச்சயமாக அரசுமேற்கொள்ளும், என்றார்.