விவசாயிகள் போற்றும் வேளாண் பட்ஜெட் அமைச்சர் வினோத் பதிலுரை
1 hour before

விவசாயிகள் போற்றும் வேளாண் பட்ஜெட் அமைச்சர் வினோத் பதிலுரை

சென்னை, ஆக. 12 -வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான பதிலுரையை வாசித்த வேளாண் அமைச்சர் வினோத், “தவெக அரசின் வேளாண் பட்ஜெட்டை வெற்று பட்ஜெட்” என்ற திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனத்திற்கு பதிலளித்தார்.

தவெகவின் வேளாண் பட்ஜெட் வெற்று பட்ஜெட் அல்ல, அது விவசாயிகள் போற்றும் வெற்றி பட்ஜெட் என்றார். லஞ்சம் இல்லாத ஆட்சியை முதலமைச்சர் விஜய் தந்துள்ளதாகவும், தமிழகத்தின் இதயம் விவசாயிகளிடத்தில் உள்ளதாகவும் தெரிவித்த அவர், ஓரிரு நாட்களில் தீர்க்க முடியும் என்றால் கடந்த ஆட்சிக் காலங்களில் ஏன் செய்யவில்லை என வினவினார்.

வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசுக்குப் போதிய கால அவகாசத்தை எதிர்க்கட்சியினர் வழங்க வேண்டும் எனவும், விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்க்க தொலைநோக்குத் திட்டங்கள் தேவை எனவும் தெரிவித்தார்.

6,000 கோடி ரூபாய் விவசாயக் கடனை முதலமைச்சர் தள்ளுபடி செய்துள்ளதாகவும், விவசாயிகள் சங்கங்களின் கருத்துகளைக் கேட்டு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அவர்களின் பெரும்பான்மையான கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளதாகவும் கூறினார்.

கடந்த ஆட்சிக்கால திட்டங்களின் பல்வேறு கூறுகளை நீக்கிப் புதிய வடிவம் கொடுத்து செயல்படுத்தியிருப்பதாகவும், பெங்களூரா மாம்பழத்திற்கு உரிய விலை நிர்ணயம் செய்யக் கோரி ஒன்றிய அரசுக்குக் கடிதம் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த ஆண்டு பல்வேறு புதிய திட்டங்களை விவசாயிகளுக்காக செயல்படுத்தவுள்ளதாகவும், ஒவ்வொரு திட்டத்திற்கும் முறையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், வெளிப்படைத்தன்மையுடன் தகுதியுடையவர்களுக்குத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.