வாழ்த்துகிறோம் எங்கள் மகளே!
27 Jul 2026, 9:07 pm

வாழ்த்துகிறோம் எங்கள் மகளே!

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடை பெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி களில், இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு பெண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத் துள்ளார். 31 வயதான அவர், ஸ்நாட்ச் பிரிவில் 85 கிலோ எடையும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 105 கிலோ எடையும் தூக்கி, ஒட்டுமொத்தமாக 190 கிலோ எடைக் கணக்குடன் புதிய காமன்வெல்த் சாத னையைப் படைத்து தனது மூன்றாவது தொடர்ச்சி யான தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். மணிப்பூரைச் சேர்ந்த இவருடன் மற்றொரு மணிப்பூர் வீரரான ரிஷிகந்தா சிங் சனம்பம் ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் ஒட்டுமொத்தமாக 264 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்று இந்தி யாவின் பெருமையை உலக அரங்கிற்கு உயர்த்தி யுள்ளார்.

பல ஆண்டுகளாக தனது உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க மேற்கொண்ட கடு மையான முயற்சிகளையும், தனது தாய் மற்றும் குடும்பத்தினரின் வழிகாட்டுதலையும் மீராபாய் உணர்வுப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார். பன்னாட்டு அரங்கில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை உயர்த்திப் பிடிக்கும் மணிப்பூர் மகள்களும் மகன்க ளும் பிறந்த மண், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறையாலும் துயரங்களாலும் பற்றி எரிகிறது. இரட்டை என்ஜின் பாஜக ஆட்சியின் நிர்வாகத் தோல்வியும், இனக்கலவரங்களைத் தடுக்கத் தவறிய அலட்சியமும் மணிப்பூரைச் சாம்பலாக்கியுள்ளது. மாநிலத்தின் அமைதியை மீட்கக் கோரி மீராபாய் உட்பட மணிப்பூரின் விளையாட்டு வீரர்களே ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதியது நினைவுகூரத்தக்கது.

விளையாட்டு வீரர்களின் வியர்வையும் உழைப் பும் மாநிலத்தின் பெருமையை உச்சத்திற்குக் கொண்டு செல்லும் போதும், ஒன்றிய பாஜக அரசின் பாராமுகமான போக்கும், பிரித்தாளும் சூழ்ச்சியும் மணிப்பூரின் எதிர்காலத்தை இருளாக்கிக் கொண்டி ருக்கிறது. பதக்க மேடைகளில் ஏறும் நமது வீரர்க ளின் வெற்றி ஒருபுறம் ஆரவாரம் செய்யப்பட்டா லும், வன்முறைக் காட்டில் தவிக்கும் மணிப்பூர் மக்க ளின் கண்ணீரைத் துடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மீராபாய் சானுவும் ரிஷிகந்தாவும் தங்களது அசாத்திய முயற்சியால் நாட்டின் பெருமையை உல கறியச் செய்துள்ளனர். இவர்களின் மகத்தான வெற்றியை மனதார வாழ்த்தும் அதேவேளையில், எதேச்சதிகார பாஜக ஆட்சியின் கீழமைந்த மணிப் பூரில் அமைதியை நிலைநாட்டவும், மக்களின் பாது காப்பை உறுதி செய்யவும் அனைத்து முற்போக்குச் சக்திகளும் ஒன்றிணைந்து தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

விளையாட்டு மைதானத்தில் பதக்கங்களை வென்று தங்களின் அசைக்க முடியாத உழைப்பை வெளிப்படுத்தும் நமது வீரர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரம், மணிப்பூரின் ஒடுக்கப்பட்ட மற்றும் வன் முறையால் பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த மக்களுக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

துயரச் சூழலிலும் சோர்ந்துபோகாமல் சாதனை களை நிகழ்த்தியுள்ள மணிப்பூரின் மீராபாய்க்கும், ரிஷிகந்தாவுக்கும் வாழ்த்துகள்!