தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மிருகண்டா அணைக்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு தனிப்பட்டா வழங்க கோரிக்கை

13 hours before
மிருகண்டா அணைக்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு தனிப்பட்டா வழங்க கோரிக்கை

மிருகண்டா அணைக்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு தனிப்பட்டா வழங்க கோரிக்கை

திருவண்ணாமலை, செப்18-திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு மிருகண்டா அணை கட்டப்பட்டது. இந்த அணைகட்டுமானப் பணிகளுக்காக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.நிலங்களை வழங்கிய 28 விவசாயிகளின் குடும்பங்க ளுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன.

எனினும், அந்த வீடுகள் தற்போது வரை பயனாளிகளான விவசாயி களின் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்படாமல்,பொதுப்பணித்துறை பெயரிலேயே உள்ளது.

பல ஆண்டுகளாக அந்த வீடுகளில் விவசாயிக ளும் அவர்களது குடும்பத்தி னரும் வசித்து வரும் நிலையில், வீடுகளுக்கான உரிமை ஆவணம் தங்களது பெயரில் இல்லாததால் பல்வேறு நடைமுறை சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக அவர்கள் தெரி விக்கின்றனர்.

எனவே, மிருகண்டா அணை கட்டுமானத்திற்காக நிலங்களை வழங்கிய 28 விவசாயிகளின் தியா

கத்தை கருத்தில் கொண்டு,அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ள குடியிருப்புகளின் உரிமையை பயனாளி களின் பெயரில் மாற்றி,தனிப்பட்டா வழங்க வேண்டும் என, விவசாயிகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த னர்.

மேலும், நீண்ட கால மாக நிலுவையில் உள்ள இப்பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண மாவட்ட நிர்வாக

மும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த மனு அளித்த நிகழ்வின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் ப. செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.லட்சுமணன் வட்டார செயலாளர் பி. சுந்தர், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட தலைவர் அருண்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.