தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாக்குத் தவறிய மோடி அரசின் பழிவாங்கும் படலம்!

28 Jul 2026, 9:58 pm
வாக்குத் தவறிய மோடி அரசின் பழிவாங்கும் படலம்!

வாக்குத் தவறிய மோடி அரசின் பழிவாங்கும் படலம்!

நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தின் விளை வாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிர தான் பதவி விலகிய ஆத்திரத்தில் மோடி அரசின் பழிவாங்கும் படலம் துவங்கியுள்ளது. போராட்டத்தைத் திரும்பப் பெறுவதற்காக ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையில், அமைதியான முறையில் போராடியவர்கள் மீது தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று சிஜேபி நிர்வாகிக ளிடம் அளித்த வாக்குறுதியை ஒன்றிய அரசு அப்பட்டமாக மீறியுள்ளது. தில்லி, பீகார், மேற்கு வங்கம் மற்றும் உ.பி. உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் மீது தொடர் கைது நடவடிக்கைகளும், நள்ளிரவில் அடையாள மற்ற வாகனங்களில் மாணவர்களைக் கடத்தும் கோழைத்தனமான செயல்களும் அரங்கேறி வருகின்றன.

போராட்டத்தின் போது காவல்துறையினர் கட்டவிழ்த்துவிட்ட வெறியாட்டங்களையும், வன்முறைச் செயல்களையும் அம்பலப் படுத்தும் சமூக வலைதளப் பதிவுகளை நீக்க தில்லி காவல்துறை மெட்டா நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இன்ஸ்டா கிராம் ரீல்ஸ்கள் மற்றும் புகைப்படங்களை முடக்குவதன் மூலம் உண்மையை மறைத்து விடலாம் என அரசு பகற்கனா காண்கிறது. இதற் கிடையே, இந்திய மாணவர் சங்க அகில இந்திய இணைச் செயலாளர் ஐஷி கோஷ் மற்றும் பல மாணவர் தலைவர்களைக் குறிவைத்து தில்லி காவல்துறை ஏகேஜி மையம் வரை சென்று கைது செய்ய முயன்றது கடும் கண்ட னத்திற்குரியது. ஜனநாயக உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் இளைஞர்களை ஒடுக்க நினைக்கும் அரசின் இத்தகைய நடவடிக்கை களை சகித்துக்கொள்ள முடியாது.

வாக்குறுதி அளித்தபடி அனைத்து வழக்கு களையும் திரும்பப் பெற்று, கைது செய்யப்பட்ட மாணவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யாவிட்டால், காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் மாணவர் அமைப்புகள் மீண்டும் வீதிக்கு வந்து மாபெரும் போராட்டங்களை முன்னெடுக் கும் என எச்சரித்துள்ளன. இந்த அடக்குமுறைக ளைச் சட்ட ரீதியாக எதிர்கொள்ள மூத்த வழக்க றிஞர் கபில் சிபல் தலைமையில் 1 கோடி ரூபாய் நிதியுதவியுடன் கூடிய தேசிய சட்ட உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளதுடன், காவல் துறையின் அத்துமீறல்களைப் பதிவு செய்ய ‘சாட்சி’ தள மும் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒன்றிய அரசின் இந்த அச்சுறுத்தல்களும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளும் நாட்டின் ஜன நாயக அமைப்புகளுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும். காவல்துறையை ஏவிவிட்டு மாண வர்களின் நியாயமான குரலைச் மௌனமாக்க முற்படும் எதேச்சதிகாரப் போக்கு ஒருபோதும் எடுபடாது. சட்டப் போராட்டத்தையும் மக்கள் திரள் போராட்டத்தையும் ஒருசேர முன்னெடுத்து, பாஜக அரசின் சதித்திட்டங்களை இளைய சமுதாயம் முழுமையாக முறியடிக்கும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.