தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமெரிக்காவின் அளப்பும் இந்தியாவில் நடப்பும்

31 Aug 2026, 8:43 pm
அமெரிக்காவின் அளப்பும் இந்தியாவில் நடப்பும்

அமெரிக்காவின் அளப்பும் இந்தியாவில் நடப்பும்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அமெரிக்காவில் ஆற்றிய உரையில், வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் மரபணுவிலேயே உள்ளது என்றும், அமெரிக்காவின் அடையாளமாகப் பன்மைத்துவம் இருப்பதுபோல, இந்தியாவின் அடையாளமாக வேற்றுமையில் ஒற்றுமை உள்ளது என்றெல்லாம் பேசியுள்ளார்.

இந்தியாவின் மரபணுவில் வேற்றுமையில் ஒற்றுமை உள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால்,சிறுபான்மை மக்கள்இந்தியாவில் இரண்டாம் தர குடிமக்களாகவேநடத்தப்படுவார்கள் என்று வெளிப்படையாகவே பேசிவரும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் மரபணுவில் அந்தத் தன்மை உள்ளதா என்பதுதான் எழுகிற கேள்வி.

இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என நினைப்பவர்கள் இந்துவாக இருக்க முடியாது என்றும், மனிதநேயம் மற்றும் மத நல்லிணக்கம்தான் இந்தியாவின் அடையாளம் என்றும் மோகன் பகவத் அருளாசி வழங்கியுள்ளார். ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினால் கருத்தியல் ரீதியாக வழிநடத்தப்படும் பா.ஜ.க. தலைமை தாங்கும் ஒன்றிய அரசு இதற்கேற்ப நடந்து கொள்கிறதா என்பதுதான் கேள்வி.

நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, குஜராத்தில் சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் குறிவைத்துப் படுகொலை செய்யப்பட்டார்கள்; அவர்களுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை. குஜராத் வன்செயலின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்.,வி.எச்.பி., பஜ்ரங் தளம் போன்ற அமைப்புகள் இருப்பதாகப் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டின. ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளர் எம்.ஜி.வைத்தியா என்பவர் குஜராத் கலவரம், “இந்துக்களின்இயல்பான எதிர்வினை” என்று நடந்த அட்டூழியங்களை நியாயப்படுத்தினார்.

ஆனால், தற்போது தன்னை மதநல்லிணக்க காவலர் போலக் காட்டிக் கொள்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத். குஜராத் வன்செயலைத் தொடர்ந்து முதல்வராக இருந்த நரேந்திர மோடி அமெரிக்கா வருவதற்கு விசாமறுக்கப்பட்டது. இப்போது மோகன் பகவத் அமெரிக்கா வருவதற்கு நியூயார்க் மேயர் ஜோரம் மம்தானி வெளிப்படையாகவே எதிர்ப்புதெரிவித்தார். அமெரிக்க சர்வதேச மத சுதந்திரஆணையம் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் உள்ளிட்ட அமைப்புகள் மோகன் பகவத்தின்அமெரிக்க வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் பசுத்தோலைப் போர்த்திக் கொண்டு வசுதைவ குடும்பம் குறித்து வகுப்பெடுத்திருக்கிறார் மோகன் பகவத்.

இந்தியாவில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை இஸ்லாமிய மற்றும் கிறித்துவ மக்கள் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள். அவர்களது வாழ்வுரிமை, குடியுரிமை, உணவுரிமை கூட கேள்விக்குள்ளாகிறது. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவரின்அளவுகடந்த பேச்சு உதட்டிலிருந்து மட்டுமே உதிர்க்கப்பட்டவை என்பதை உலகம் புரிந்தே வைத்திருக்கிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.