தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கு பேட்டரி வீல்சேர் வழங்க வேண்டும் பல ஆண்டுகளாக போராடும் தாய்

12 hours before
மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கு பேட்டரி வீல்சேர் வழங்க வேண்டும் பல ஆண்டுகளாக போராடும் தாய்

மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கு பேட்டரி வீல்சேர் வழங்க வேண்டும் பல ஆண்டுகளாக போராடும் தாய்

கள்ளக்குறிச்சி,செப். 4-இரண்டு மாற்றுத்திற னாளி பிள்ளைகளுக்கு பேட்டரி வீல்சேர் வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக தாய்,போராடி வருகிறார்.கள்ளக்குறிச்சி, வீரசோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா. இவரது கணவர் ஆறுமுகம். இத்தம்பதிக்கு மனோகர் மற்றும் மாலினி என இரண்டு மாற்றுத்திறனாளி பிள்ளைகள் உள்ளனர். இருவருமே நடக்க முடியாத நிலையில் உள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் அன்றாட தேவைகளுக்கும், வெளியிடங்களுக்குச் சென்று வருவதற்கும் பேட்டரியால்இயங்கக்கூடிய பேட்டரிசக்கர நாற்காலி வழங்க வேண்டும்என தாய் சரோஜா பல ஆண்டுகளாக அரசு அலுவ லகங்களில் மனு அளித்து போராடி வருகிறார்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. வயதான காலத்தில் இரண்டு மாற்றுத்திறனாளி பிள்ளைகளையும் தனி ஒரு ஆளாகபராமரித்து வரும் சரோஜா வுக்கு, பேட்டரி வீல்சேர் மிக வும் அத்தியாவசியமாக உள்ளது.எனவே, எங்களது நீண்ட நாள் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக முதல்வர் விஜய் நிறைவேற்றி தரவேண்டும் என தாய் சரோஜா மற்றும் மாற்றுத் திறனாளி பிள்ளைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.