ஊட்டச்சத்து திட்டங்கள் அமலில் இருந்தாலும் அச்சுறுத்தும் ரத்தசோகை மக்களவையில் ஒன்றிய அரசு பதிலை சுட்டிக்காட்டி ஆர். சச்சிதானந்தம் எம்.பி. விமர்சனம்!
yesterday

ஊட்டச்சத்து திட்டங்கள் அமலில் இருந்தாலும் அச்சுறுத்தும் ரத்தசோகை மக்களவையில் ஒன்றிய அரசு பதிலை சுட்டிக்காட்டி ஆர். சச்சிதானந்தம் எம்.பி. விமர்சனம்!

புதுதில்லி, ஜூலை 31-நாட்டில் ‘போஷான் அபியான்’ உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்து சீரமைப்புத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வந்தபோதிலும், குழந்தைகள் மற்றும் பெண்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்தசோகைஇன்னமும் அதிக அளவில் நீடித்து வருவதாக நாடாளுமன்றத் தில் ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வ மாகத் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் எழுப்பிய எழுத்துப்பூர்வக் கேள்விக்கு (எண்: 1124), மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சாவித்ரி தாகூர் ஜூலை 24 அன்று பதிலளித்தார்.

தொடரும் ஊட்டச்சத்துக் குறைபாடும் தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு தரவுகளும்

நாட்டில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் வளர்ச்சிக் குறைபாட்டினாலும், பெண்களும் குழந்தைகளும் பெருமளவில் ரத்தசோகையினாலும் பாதிக்கப்பட்டு வருவது குறித்து அரசு விரிவான ஆய்வு ஏதேனும் மேற்கொண்டுள்ளதாஎன்று ஆர். சச்சிதானந்தம் எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த மத்திய இணை அமைச்சர் சாவித்ரி தாகூர், ஊட்டச்சத்து குறைபாடு என்பது வறுமை, போதியஉணவின்மை, சுகாதாரமற்ற சூழல் மற்றும் பராமரிப்புக் குறைபாடு போன்ற பலதரப்பட்ட காரணங்களால்ஏற்படும் ஒரு கூட்டுப் பிரச்சனையாகும் என்று தெரிவித்தார். இதனை எதிர்கொள்ள ‘சக்சம் அங்கன்வாடி மற்றும்போஷான் 2.0’ திட்டத்தின்கீழ் 18-க்கும் மேற்பட்ட அமைச்சகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுச் செயல்பட்டுவருவதாகவும் அவர் விளக்கமளித்தார்.

அரசு வெளியிட்ட தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு (NFHS) தரவுகளின்படி, 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாடு என் எப் எச்எஸ்-1 (1992-93) காலகட்டத்தில் 52 சதவீதமாக இருந்தது. இது படிப்படியாகக் குறைந்து என் எப் எச்எஸ்-5 (2019-21) காலகட்டத்தில் 35.5 சதவீதமாகவும், என் எப் எச்எஸ்-6 (2023-24) மற்றும் போஷான் ட்ரேக்கர் (ஜூன் 2026) தரவுகளின்படி 29.3 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.

அதேவேளையில், ரத்தசோகை பாதிப்பைப் பொறுத்தவரை என் எப் எச்எஸ்-5 தரவுகளின்படி, 6 முதல் 59 மாதங்கள் வரையிலான குழந்தைகளில் 67.1 சதவீதம் பேரும், 15 முதல் 49 வயதுடைய பெண்களில் 57 சதவீதம் பேரும் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்என்பது தெரியவந்துள்ளது. நாட்டில் உள்ள 14 லட்சம் அங்கன்வாடி மையங்கள் ‘போஷான் ட்ரேக்கர்’ செயலி மூலம்கண்காணிக்கப்படுவதாகவும், ‘அனீமியா முக்த் பாரத்’ மற்றும் ஊட்டச்சத்து மறுவாழ்வு மையங்கள் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அரசு கூறியுள்ளது.

ஆர். சச்சிதானந்தம் எம்.பி. விமர்சனம்

ஒன்றிய அரசின் இந்தப் பதிலைக் சுட்டிக்காட்டி ஆர். சச்சிதானந்தம் எம்.பி தனது விமர்சனத்தைப் பதிவுசெய்துள்ளார்

ஊட்டச்சத்து திட்டங்கள் மற்றும் கண்காணிப்புச் செயலிகள் குறித்து ஒன்றிய அரசு பெருமிதம் பேசினாலும்,நாட்டின் 67 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகளும், 57 சதவீத பெண்களும் ரத்தசோகையால்பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற கசப்பான உண்மையை அரசுத் தரவுகளே தெளிவுபடுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு வறுமையும் உணவுப் பற்றாக்குறையும்தான் காரணம் என அரசு ஒப்புக்கொண்டுள்ளதன் மூலம், நாட்டின் ஏழ்மையையும் விலைவாசியையும் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தவறிவிட்டதுவெளிப்படையாகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெறும் டிஜிட்டல் செயலிகளில் பதிவேற்றுவதாலும், விழிப்புணர்வுப் பேரணிகளாலும் மட்டும் ஏழை எளியமக்களின் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை யைப் போக்கிவிட முடியாது என்று கூறிய அவர், பொது விநியோகமுறையை வலுப்படுத்தி சத்துணவுப் பொருட்களைத் தடையின்றி வழங்குவது, அங்கன்வாடி உள்கட்டமைப்பைமேம்படுத்துவது மற்றும் மக்களின் வாங்கும் திறனை உயர்த்துவது போன்ற கட்டமைப்பு சார்ந்த மாற்றங்களையேஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.