தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இசையமைப்பாளர் தேவா மறைவு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்!

yesterday
இசையமைப்பாளர் தேவா மறைவு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்!

புகழ்பெற்ற இசையமைப்பாளரான ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

“புகழ்பெற்ற இசையமைப்பாளரான "தேனிசைத் தென்றல்" தேவாவின் மறைவு தென்னிந்திய திரையுலகிற்கு பெரும் இழப்பாகும். 40 ஆண்டுகளில் 450 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தமிழ் மட்டுமல்ல கன்னடம், தெலுங்கு திரைப்படங்களுக்கும் இவரது இசைப் பங்களிப்பு இருந்திருக்கிறது. எளிய மக்களின் வாழ்க்கையை, பாடுகளை உள்ளடக்கிய "கானா" வடிவம் இவரால் திரைப்படங்களில் அறிமுகம் ஆகி எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது.

1986 - 2026 வரையிலான இவரின் இசைப் பயணம் கலையுலக வரலாற்றில் அழியாப் பதிவுகளாக நிலைத்து நிற்கும். கலை மாமணி விருது பெற்றவர். "பாட்ஷா" "அருணாச்சலம்" "ஆசை" "வாலி" உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்கள் இவரின் இசையில் உருவானவை. அவரே பாடல்களை எழுதி பாடியவர். இசையின் பல்வேறு பரிமாணங்களிலும் தனது அற்புதமான ஆற்றலை வெளிப்படுத்திய கலை ஆளுமையை தமிழ்நாடு இழந்திருக்கிறது.

மறைந்த தேவா அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது நெஞ்சார்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறது. அவரது பிரிவால் வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.