தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நாடாளுமன்றம் முடங்கியதற்கு மோடி, அமித்ஷா-வே காரணம்!நாடாளுமன்றம் முடங்கியதற்கு மோடி, அமித்ஷா-வே காரணம்!

14 Aug 2026, 10:26 pm
நாடாளுமன்றம் முடங்கியதற்கு மோடி, அமித்ஷா-வே காரணம்!நாடாளுமன்றம் முடங்கியதற்கு மோடி, அமித்ஷா-வே காரணம்!

நாடாளுமன்றம் முடங்கியதற்கு மோடி, அமித்ஷா-வே காரணம்!

கோவை, ஆக.14-நாடாளுமன்றம் முடங்கியதற்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷவே காரணம் என சிபிஐ மூத்த தலைவர் இரா.முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆக.6 முதல் ஆக.15 ஆம் தேதி வரை நாடு தழுவிய அளவில் ‘மக்கள் சந்திப்பு இயக்கம்’ நடைபெற்று வருகிறது. கோவையில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தின் போது, அக்கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் இரா.முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும், பொது விநியோக முறையின் மூலம் மக்களுக்கு எளிதாக கிடைக்க செய்யவும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு மற்றும் குறு தொழில்களுக்கான மின் இணைப்பு கட்டணம் மற்றும் நிலைக்கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். கோவை மாவட்ட மக்களின் நீண்டகாலகனவுத்திட்டமான பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கு போதிய மக்கள் தொகை இல்லை எனக்கூறி மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி மறுக்கும் ஒன்றிய அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. குறைந்த மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தை புறக்கணிக்கும் நோக்கில் செயல்படும் ஒன்றிய அரசு உடனடியாக இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும்.தமிழகத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்ற முத்தரசன், புதிய ஒப்பந்தங்கள் எவை, புதுப்பிக்கப்பட்டவை எவை என்ற விவரங்களை அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

நாடாளுமன்ற தொகுதிகளை 850 ஆக உயர்த்த ஒன்றிய அரசு தீவிரமாக முயற்சிப்பதன் பின்னணியில், தற்போதைய அரசியலமைப்பு சட்டத்தை செல்லாததாக்கி, மனுதர்ம சட்டத்தை கொண்டு வருவதற்கானசதி வலையுள்ளது. பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டை தற்போது நடைமுறையில் உள்ள தொகுதிகளிலேயே உடனடியாக வழங்க வேண்டும். நாடாளுமன்றம் முற்றிலும் முடங்கிப்போனதற்கு பிரதமரும், உள்துறை அமைச்சருமே காரணம். கோவை மாணவர் அமுதன் கொலை விவகாரத்தில் உண்மைத் தன்மையை கண்டறிய வேண்டும். போதைப்பொருளை பிடிப்பதை விட, குஜராத் துறைமுகம் போன்ற அது புறப்படும் இடங்களிலேயே தடுத்து நிறுத்த வேண்டும்.

சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதே அரசின் முதன்மையான கடமையாகும். உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது இடங்கள் அனைத்தும் மதச்சார்பற்ற பகுதிகளாகவே இருக்க வேண்டும். அகிலஇந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசிச்சென்ற மேடையை கோமியம் (மாட்டின் சிறுநீர்) தெளித்து சுத்தம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் கண்டிக்கத்தக்க பாவச்செயலாகும். நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை அரசு உறுதியுடன் நிலைநாட்ட வேண்டும், என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.