தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நல்லூர் சுங்கச்சாவடி அருகே சிறு கடைகளை அகற்ற எதிர்ப்பு உடனடியாக நிறுத்தக் கோரிக்கை

14 Aug 2026, 11:49 pm
நல்லூர் சுங்கச்சாவடி அருகே  சிறு கடைகளை அகற்ற எதிர்ப்பு உடனடியாக நிறுத்தக் கோரிக்கை

நல்லூர் சுங்கச்சாவடி அருகே சிறு கடைகளை அகற்ற எதிர்ப்பு உடனடியாக நிறுத்தக் கோரிக்கை

திருவள்ளூர், ஆக. 14-திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம் விஜயநல்லூர் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை ஒட்டி பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வரும் நடைபாதை வியாபாரிகளின் கடைகளை அகற்றும் பணிக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

சுங்கச்சாவடி பகுதிக்கு முன்பாக சாலையோரம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 150-க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் இயங்கி வருகின்றன. சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வியாபாரிகள் சற்று பின்னோக்கி கடைகளை வைத்துக் பிழைப்பு நடத்தி வந்த நிலையில், தற்போது தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டு அப்பகுதியில் பெரிய அளவிலான கடைகள் கட்டுவதற்காக வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளால் சுமார் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் அவர்களின் குடும்பத்தினரும் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். எனவே, உடனடியாக இந்தப் பணியை நிறுத்தி வியாபாரிகளின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் அல்லது உரிய மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என சிறுபாதை கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.