தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வெடி விபத்து: உரிய விசாரணை நடத்த சிபிஎம் கோரிக்கை

4 Oct 2026, 2:14 am
வெடி விபத்து: உரிய விசாரணை நடத்த சிபிஎம் கோரிக்கை

வெடி விபத்து: உரிய விசாரணை நடத்த சிபிஎம் கோரிக்கை

நாமக்கல், அக்.3-பரமத்தி வேலூர் அருகே வீட்டில் நாட்டு வெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு உரியநிவாரணம்வழங்கவும், விதிமுறைகளை மீறி வெடிபொருட்கள் தயாரித்து வைத்திருந்தவர்கள் மற்றும் அதற்கு அனுமதி அளித்தஅதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட இந்த வெடி விபத்தில், வீட்டின் உரிமையாளர் ராஜா, அவரது மனைவி சத்யா மற்றும் பணியாளர் பொன்மலர் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மேலும், முதல்மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானதுடன், தரைத்தளமும் பெருமளவில் சேதமடைந்தது. அருகில் இருந்த சில வீடுகளும் கட்டிட இடிபாடுகளால் பாதிக்கப்பட்டன. அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு சென்றனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தங்கமணி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.செல்வராணி, திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் முகமது உசேன், தொழிலாளர் அணி மாநிலஇணைச்செயலாளர் வீரமுருகன், பரமத்தி வேலூர் பொது தொழிலாளர் சங்க அமைப்பாளர் அறிவாயுதம் என்கிற காமராஜ், சிபிஎம் நிர்வாகிகள் கே.பி.முத்துசாமி எம்.மாதையன் உள்ளிட்டோர் சனியன்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டக்குழு வெளியிட்ட அறிக்கையில்,மக்கள் நெருக்கம் மிகுந்த குடியிருப்பு பகுதிகளில் பட்டாசுகளை சேமித்து வைப்பதும், தயாரிப்பதும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்த ராஜா பட்டாசுவிற்பனைக்கான அனுமதி பெற்றிருந்ததாகவும், அந்த அனுமதியை உரிய காலத்தில் புதுப்பிக்காமல், முறைகேடாக பயன்படுத்தி வீட்டிலேயே நாட்டு வெடிகளை தயாரித்து வந்ததாகவும் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆட்சேபனை தெரிவித்தும், அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பட்டாசு விற்பனைக்கான உரிமத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்கவேண்டும். சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் உரிமையாளர் 2021 ஆம் ஆண்டில்உரிமத்தை புதுப்பித்த பின்னர் முறையான அனுமதி பெறாமல்வெடிபொருட்களை தயாரித்து சேமித்து வைத்திருந்தார். மேலும், பரமத்தி வேலூர் வட்டாரத்தில் பொத்தனூர் பேரூராட்சிஉள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்குடியிருப்புகளுக்கு மத்தியில் வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இந்த விபத்தில் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த பணியாளர் பொன்மலரும் உயிரிழந்துள்ள நிலையில், அவரது குடும்பத்தினரை மாவட்ட நிர்வாகம் நேரில் சந்தித்து வாழ்வாதார உதவி மற்றும் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடியிருப்பு பகுதிகளில் முறையான அனுமதியின்றி வெடி பொருட்கள் தயாரித்து, சேமித்து, விற்பனைசெய்வோர் மீது கடும் நடவடிக்கைஎடுக்க வேண்டும். விதிமுறைகளைமீறிய செயல்களுக்கு அனுமதித்ததாக கூறப்படும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீதும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும், இவ்வாறு அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.