தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அடுத்தடுத்து இடிந்து விழும் வகுப்பறை கட்டிடங்களை சீரமைத்திடுக நந்தனம் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

1 hour before
அடுத்தடுத்து இடிந்து விழும் வகுப்பறை கட்டிடங்களை சீரமைத்திடுக நந்தனம் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

அடுத்தடுத்து இடிந்து விழும் வகுப்பறை கட்டிடங்களை சீரமைத்திடுக நந்தனம் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

சென்னை, செப். 30 -வகுப்பறை கட்டிடங் களை சீரமைக்க கோரிபுதனன்று (செப். 30) நந்தனம் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

கல்லூரியின் அறிவியல் பிரிவு கட்டி டத்தில் உள்ள கணித துறை வகுப்பறை மேற்கூறை பூச்சுகள் ஒரு வாரத்திற்கு முன்பு இடிந்து விழுந்தது. இதை கல்லூரி நிர்வாகம் சரி செய்து கொண்டிருந்தது. அடுத்த 2 நாட்களில் பொரு

ளியல் துறை உள்ள 7 வகுப்பறையில் 6 வகுப் பறைகளின் மேற்கூறை பூச்சுகள் இடிந்து விழுந்தது.

கட்டிடங்கள் தொட ர்ந்து இடிந்து விழு வதை சீரமைக்க கோரி மாண வர்கள் போராட்டம் நடத்த

முற்பட்டனர். அப்போது,உடனடியாக கட்டிடங் கள் பழுதுபார்த்து சீர மைக்கப்படும் என்று நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி உறுதி கொடுத்தது.

ஒரு வாரம் கடந்தும், மேற்பூச்சுகள் இடிந்து விழுந்த அதே அறையில் மாணவர்களை அமர வைத்து வகுப்பு எடுத்துள்ள தோடு, தேர்வுகளையும் நடத்தி வருகின்றனர் என்று கூறி மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிலும் நிலை யில் சுத்தமான கழிப்பறை இல்லை. மாணவர்களுக்கு கழிப்பறையே இல்லை. சுத்திகரிப்பட்ட குடிநீர் இல்லை. வகுப்புகளை சுத்தப்படுத்த தூய்மை பணியாளர்கள் இல்லை. வளாகத்தில் உள்ள 18 கட்டிடங்களை பரா மரிப்பதற்கு பதிலாக, போராடும் மாணவர்களை நிர்வாகம் மிரட்டுகிறது என்று மாணவர்கள் குற்றம் சாட்டினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் எம்.விக்னேஷ் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் ஆர்.கமலேஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் நிலா, கீர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.