நாடு முழுவதும் இன்று மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்!
yesterday
<p>தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்குகிறது. இந்த கணக்கெடுப்பு வரும் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.</p><p>இந்தப் பணியில் 19 ஆயிரம் அதிகாரிகளின் மேற்பார்வையில் 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபடுகின்றனர். கணக்கெடுப்பின்போது குடும்ப உறுப்பினர்கள், வீடு மற்றும் வீட்டில் உள்ள அடிப்படை வசதிகள் தொடர்பாக மொத்தம் 33 கேள்விகள் கேட்கப்பட உள்ளன.</p><p>ஏற்கனவே டிஜிட்டல் முறையில் சுயகணக்கெடுப்பு செய்தவர்கள், அதற்கான சுயகணக்கெடுப்பு அடையாள எண்ணை (SE ID) மக்கள் தொகை கணக்கெடுப்பாளரிடம் காட்டுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p>
