புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையில் தேங்கும் தண்ணீர் : பொதுமக்கள் கொதிப்பு !
3 hours before
<p><strong>புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையில் தேங்கும் தண்ணீர் : பொதுமக்கள் கொதிப்பு !</strong></p><p>ராணிப்பேட்டை, ஆக.3-காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட கரிவேடு ஊராட்சி, (மதுரா) சித்தஞ்சி ரோட்டு தெருவில் அண்மையில் போடப்பட்ட புதிய சிமெண்ட்சாலை, மழைநீர் வடிவதற்கு வழி யின்றி ‘மினி குளம்’ போலமாறியுள்ளதால் அப்பகுதிமக்கள் பெரும் அவதிக் குள்ளாகி வருகின்றனர்.ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், ஒன்றிய பொது நிதி (2024–25) திட்டத்தின்கீழ் சுமார் ரூ.6லட்சம் மதிப்பீட்டில் இந்தச் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. சாலை அமைக்கும் பணி முடிந்து சில தினங்களேஆன நிலை யில், முறையான நீர் வடி கால் வசதி மற்றும் சரியான திட்டமிடல் இன்றி சாலை அமைக்கப்பட்டதால், தெரு வில் தேங்கும் கழிவுநீரும் மழைநீரும் வடிய வழி யின்றி குளம்போல தேங்கி நிற்கிறது.சாலையில் தண்ணீர்தேங்கி நிற்பதால், அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டா ருக்கு இடையே நீர் தேங்கு வதுதொடர்பாகத் தொடர் வாக்குவாதங்களும் சண்டைகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை உருவெடுக்கும் சூழல் நிலவுகிறது.மேலும், தேங்கியுள்ள நீரில் கொசுக்கள் அதிகள வில் உற்பத்தி உற்பத்தியாகி வருகின்றன. வரவிருக்கும்மழைக்காலத்தில் இந்த நிலை நீடித்தால், டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவி அப்பகுதிபொதுமக்களின், குறிப்பாக குழந்தைகளின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என அஞ்சப்படுகிறது.“வரிப்பணத்தில் போடப் பட்ட புதிய சாலை, பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே சாபக்கேடாக மாறியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட வட்டாரவளர்ச்சி அலுவலர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, கள ஆய்வுமேற்கொண்டு சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.</p>
