தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நிர்மல் குமார் - உதயநிதி வார்த்தை யுத்தம்!

1 hour before
நிர்மல் குமார் - உதயநிதி வார்த்தை யுத்தம்!

நிர்மல் குமார் - உதயநிதி வார்த்தை யுத்தம்!

சென்னை, ஆக.21-மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்வாரிய தலைமைஅலுவலகம் உள்ளிட்ட இடங்களில் முக்கிய ஆவணங்கள் அடங்கிய 18 ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போனதாகவும், ஆனால் கிடைத்தது 38 ஹார்டு டிஸ்க்எனக் கூறப்பட்டதைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.

அப்போது குறுக்கிட்ட மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், “கடந்த 5 ஆண்டுகளில் மின்வாரியம் பட்ட பாடுகளை ஒரு வரியில் விளக்க முடியாது” எனக் கூறியதோடு, செந்தில் பாலாஜியை “கரூர் என்பதோடு, சர்ச்சைக்குரிய ஒரு வார்த்தையையும் சேர்த்துக் கூறினார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, அந்த வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து பேரவைத் தலைவர் நீக்கம் செய்தார். அதைத்தொடர்ந்து கரூர் முன்னாள் எம்எல்ஏ இப்போதைய கோயம்புத்தூர் எம்.எல்.ஏ” என்று நிர்மல் குமார்குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய நிர்மல் குமார், எதிர்க்கட்சித் தலைவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் செல்ல அவரது இல்லத்திற்கு சென்றபோது என்று கூறி... இந்த ஒரு சம்பவத்தை குறிப்பிட்டுமீண்டும்சர்ச்சையைக் கிளப்பினார். இதற்கு திமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மீண்டும் அமைச்சர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து பேரவை தலைவர் நீக்கம்செய்தார்.

இதற்கிடையே குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் நிர்மல் குமாருக்கு பதிலளிக்கும் விதமாக, ‘மாண்புமிகு சங்கி அமைச்சர்’என்று அழைத்ததோடு, தமிழ்நாட்டில் யார் எவ்வளவு நேரம் பாத்ரூமில் இருக்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கத் தான் அமைச்சர்களை நியமித்துள்ளார்களா? என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது பேரவை தலைவர் குறுக்கிடுகையில், “முதலில் தவறாகப் பேசியது அமைச்சர்தான்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.அதைத்தொடர்ந்து, பேரவையைத் தலைவர் அவையை அமைதிப்படுத்தினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.