தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வடகோவை ரயில் நிலையத்தில் தொடரும் புனரமைப்புப் பணி: 6 கி.மீ சுற்றிச் செல்லும் வாகன ஓட்டிகள் - கவி -

9 hours before
வடகோவை ரயில் நிலையத்தில் தொடரும் புனரமைப்புப் பணி:  6 கி.மீ சுற்றிச் செல்லும் வாகன ஓட்டிகள் - கவி -

வடகோவை ரயில் நிலையத்தில் தொடரும் புனரமைப்புப் பணி: 6 கி.மீ சுற்றிச் செல்லும் வாகன ஓட்டிகள்

- கவி -

கோவை, ஆக.9-வடகோவை ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதால், வாகன ஓட்டிகள் 6 கி.மீ. சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொழில் நகரமான கோவை மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் வந்து செல்கின்றனர். திருப்பூர், ஈரோடு உள்ளிட்டசுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து கோவை பிரதான ரயில் நிலையம் மற்றும் வடகோவை ரயில் நிலையத்திற்குதினமும் ரயில் போக்குவரத்து மிக முக்கியத் தேவையாக உள்ளது. அதேபோல, கோவையில் இருந்தும் பணி நிமித்தமாக திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளுக்கு ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் ரயில்களில் பயணிக்கின்றனர்.

இந்நிலையில், வடகோவை ரயில் நிலையத்தில் தற்போது புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அங்குள்ள நுழைவு வாயில்கள் சீரமைக்கப்பட்டு புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. ராஜேந்திர பிரசாத் சாலையில் இரண்டு நுழைவு வாயில்களும், எஸ்.என்.தாஸ் லேஅவுட் சாலையில் ஒரு நுழைவு வாயிலும் அமைந்துள்ளன. இதில், ராஜேந்திர பிரசாத் சாலையில் அமைந்துள்ள இரண்டு நுழைவு வாயில்களில், ஒரு நுழைவு வாயில் முழுமையாக அடைக்கப்பட்டு ரயில்வே அதிகாரிகளின் கார்கள் நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. மற்றொரு நுழைவு வாயிலை இதுவரை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது தளம் அமைக்கும் பணிக்காக அந்த நுழைவு வாயிலும் மூடப்பட்டுள்ளது.

இதனால் ரயிலை பிடிக்க வரும் பயணிகள் கிட்டத்தட்ட 6 கிலோ மீட்டர் சுற்றிச்சென்று, எஸ்.என்.தாஸ் லேஅவுட் சாலையில் அமைந்துள்ள நுழைவு வாயில் வழியாகவே நிலையத்திற்குள் செல்ல வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. சுற்றிச் செல்வதால் ஏற்படும் நேர விரயம் மற்றும் அலைச்சல் காரணமாக கடுமையாக அவதியடைந்து வரும் பயணிகள், வேறு வழியின்றி ராஜேந்திர பிரசாத் சாலையில் தளம் போடுவதற்காகதோண்டப்பட்டுள்ள பெரிய பள்ளத்திலேயே இறங்கி, ஆபத்தான முறையில் ரயில் நிலையத்திற்குள் செல்கின்றனர். இதில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும்தடுமாறி கீழே விழும் நிலையும், காயம் அடையும் அபாயமும் நாள்தோறும் தொடர்கிறது.

இதனால் அதிகாரிகளின் வாகன நிறுத்தத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதை விடுத்து, மக்கள் பயன்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள நுழைவு வாயில்களில் ஏதேனும் ஒன்றின் பணியையாவது போர்க்கால அடிப்படையில் விரைந்து முடித்து, உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் மற்றும் பயணிகளின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.