முந்தய பக்கம்

தேசிய பங்குச் சந்தையின் ஐபிஓ வெளியீடு பாரத ஸ்டேட் வங்கி பங்குகள் விற்பனை

6 hours before
தேசிய பங்குச் சந்தையின் ஐபிஓ வெளியீடு  பாரத ஸ்டேட் வங்கி பங்குகள் விற்பனை

தேசிய பங்குச் சந்தையின் ஐபிஓ வெளியீடு பாரத ஸ்டேட் வங்கி பங்குகள் விற்பனை

சென்னை, செப். 12- தேசிய பங்குச் சந்தை யின் ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீட்டிற்கான பங்கு விலை வரம்பு ரூ.1,700 முதல் ரூ.1,785 வரை (முக மதிப்பு ரூ. 1) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐபிஓ பங்கு வெளியீடு வரும் 17 அன்று சந்தையில் விற்பனைக்குத் திறக்கப்பட்டு, செப்டம்பர் 21, அன்று நிறைவடைகிறது. முத லீட்டாளர்கள் குறைந்த பட்சம் 8 பங்குகளுக்கும், அதற்கு மேல் பல மடங்கு வாங்க விண்ணப்பிக்கலாம். இந்நிறுவனத்தின் தற்போதைய ஒட்டு மொத்தப் பங்குகளின் எண்ணிக்கை 247கோடியே5 லட்சம் ஆகும்.

பாரத ஸ்டேட் வங்கி , கனடா பென்சன் பிளான் இன்வெஸ்ட்மென்ட் போர்டு, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்கு தாரர்களின் 12,64,36,650 பங்குகள் இந்த ஐபிஓ மூலம் விற்பனை செய்யப் படவுள்ளன. செபி விதி முறைகளின்படி, தகுதி

வாய்ந்த நிறுவன முத லீட்டாளர்க ளுக்கு அதிகபட்சம் 50 சதவீத பங்குகளும், நிறுவனசாரா முதலீட்டா ளர்களுக்கு குறைந்தபட்சம் 15 சதவீத பங்குகளும், சில்லறை முதலீட்டாளர்களுக்கு குறைந்த பட்சம் 35 சதவீத பங்குகளும் ஒதுக்கப் பட்டுள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram