ஒடிசா கல்லூரிகளில் மாணவர் சங்கத் தேர்தல் – எஸ்.எஃப்.ஐ அபார வெற்றி!
yesterday
<p>ஒடிசா கல்லூரிகளில் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தல்களில் இந்திய மாணவர் சங்கம் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது.</p><p>கோய்தா கல்லூரியில் போட்டியிட்ட அனைத்து 16 பதவிகளையும் எஸ்.எஃப்.ஐ கைப்பற்றியுள்ளது. குருண்டியா அரசு பட்டப்படிப்புக் கல்லூரியில் தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட ஆறு பதவிகளையும், லஹுனிபாரா கல்லூரியில் தலைவர், கலாச்சார மன்றச் செயலாளர், கலாச்சார மன்ற இணைச் செயலாளர் உள்ளிட்ட மூன்று பதவிகளையும் வென்றுள்ளது.</p><p>பூரி மாவட்டத்தில் உள்ள சுரஜ்மல் சாஹா மகாவித்யாலயாவில் எஸ்எஸ்ஜி செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட பூஜா வெற்றி பெற்றுள்ளார். புவனேஸ்வரில் உள்ள சட்டக் கல்லூரியில் கலாச்சார மன்றச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட தனிஷா ராத் வெற்றி பெற்றுள்ளார்.</p>
