தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“3 கோரிக்கைகளுக்காக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடரும்”

5 Aug 2026, 8:33 pm
“3 கோரிக்கைகளுக்காக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடரும்”

“3 கோரிக்கைகளுக்காக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடரும்”

3 கோரிக்கைகளுக்காக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடரும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைஉறுப்பினர் பி.சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில்,”எதிர்க்கட்சிகளின் 3 கோரிக்கைகளில் முதலாவதாக, ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்குவது அரசாங்கம் அளித்த முக்கிய வாக்குறுதி மிக முக்கியமானது.உச்சநீதிமன்றமும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ள போதிலும், மாநில அந்தஸ்து இன்னும்மீட்டெடுக்கப்படவில்லை. ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீண்டும்வழங்குவதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். இரண்டாவதாக, ராமர் கோவில் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். மூன்றாவதாக, ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தடியடி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்திற்கு வந்து அறிக்கை வெளியிட வேண்டும். இந்த 3 கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை”போராட்டம் தொடரும் என பி.சந்தோஷ் குமார் எம்.பி., கூறியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.