முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

yesterday
தீக்கதிர் முக்கிய செய்திகள்

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்

தில்லி காவல்துறைக்கு போடப்பட்ட உத்தரவுகள் தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் போராட்டக்காரர்களை மிரட்டுகிறார்கள், தாக்குகிறார்கள் ஆனால் பாஜக குண்டர்கள் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்வதில்லை. போராட்டக்காரர்கள் மீது மட்டுமே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கிறார்கள்.

பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்

மோடியும் அமித் ஷாவும் ஒரே இரவில் ஞானேஷ் குமாரை தலைமை தேர்தல் ஆணையராக முடிவு செய்கிறார்கள். அதைத்தொடர்ந்து தேர்தல்களை நடத்துவதற்கு இது ஒரு நியாயமான முறை என்று அரசாங்கம் உங்களை நம்ப வைக்கிறது. இது என்ன ஒரு கேலிக்கூத்து.

திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ரா

வினாத்தாள் கசிவு கும்பல் பிடிபட்டதா எனத்தெரியவில்லை. ஆனால் இணையத்தில் செயல்படும் இளைஞர்களை ஒன்றிய அரசு ஒடுக்கிக் கொண்டிருக்கிறது. இணையத்தில் ரீல் விடுவதை நிறுத்தி விட்டு, நாடாளுமன்றத்துக்கு வந்து எதிர்கட்சியினருக்கு பதில் சொல்லுங்கள் மோடி!

சிஜேபி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ்

50% மக்களவை எம்.பி.க்கள் மீது குற்ற வழக்குகள் இருக்கின்றன. அவர்களில் 100 பேர் பாஜகவில் இருக்கின்றனர். மோடியை விமர்சித்த மாணவி மீது கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, குற்றவழக்கு கொண்ட எம்.பி.க்கள் மீது காவல்துறை கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்களை அச்சுறுத்தும் வேலை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram