தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஓவைசிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிக்கு அளிக்க வேண்டிய அணிவகுப்பு மரியாதை

22 Nov 2026, 9:11 pm
ஓவைசிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிக்கு அளிக்க வேண்டிய அணிவகுப்பு மரியாதை

ஓவைசிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிக்கு அளிக்க வேண்டிய அணிவகுப்பு மரியாதை

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) தலைவர் சந்திரசேகர் ஆசாத் உடனான வாகன அணிவகுப்புடன், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி சென்றார். இருவரது கட்சியும் கூட்டணி அமைத்து உத்தரப்பிரதேச தேர்தலில் 3ஆவது அணியாக போட்டியிடுகிறது.

ஓவைசி சுற்றுலா மாளிகைக்குள் சென்ற போது, உச்சநீதிமன்ற நீதி

பதிக்கு அளிக்க வேண்டிய அணிவகுப்பு மரியாதையை அம்மாநில காவல்துறை வழங்கியது. சீருடை அணிந்த 4 காவலர்கள் கட்டிடத்தின் நுழைவாயிலில் நின்று துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத் தினர். ஓவைசியும் சிறிது நேரம் நின்று அந்த மரியாதையை ஏற்றுக்கொண்ட பிறகு உள்ளே சென்றார். இதுதொடர்பாக ஓவைசி கூறுகையில்,”தனக்கு எதற்காக இந்த மரியாதை அளிக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் மரியாதைக்காக நிற்குமாறு காவலர்கள் தன்னிடம் கூறினர். அந்த அறிவுறுத்தலைத் தான் பின்பற்றினேன்” என அவர் கூறினார்.

நீதிபதி வருகை கூட அடையாளம் தெரியாதா?

சஹாரன்பூன் அரசு சுற்றுலா மாளிகைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் யாரும் வரவில்லை. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் சார்பில் எந்த அறிவிப்பும் இல்லை. அதே சமயம் ஓவைசி, சந்திரசேகர் ஆசாத் ஏன் அரசு சுற்றுலா மாளிகைக்கு சென்றனர்; உச்சநீதிமன்ற நீதிபதிக்கும், அரசியல்வாதிகளுக்கும் உள்ள வித்தியாசம் மற்றும் கட்சிக் கொடிகள் சூழ வந்த ஓவைசி, சந்திரசேகரை உத்தரப்பிரதேச காவல்துறையினர் அடையாளம் காணவில்லையா என பல கேள்விகள் கிளம்பியுள்ளன. எனினும் இந்த விவகாரம் தொடர்பாக உத்தரப்பிரதேச காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் உத்தரப்பிரதேச தேர்தலில் வாக்குகளை பிரிக்க ஓவைசி - சந்திரசேகர் 3ஆவது அணி அமைத்துள்ளனர். தற்போது இருவரும் பாஜகவிற்கு மிக நெருக்கமாக உள்ளனர்.அதற்காகதான் காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது என சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.