தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இடதுசாரிகள் மேலும் இருவர் சட்டமன்றம் செல்வது மக்கள் குரலை வலுப்படுத்தும்! பெ. சண்முகம் பேட்டி

yesterday
இடதுசாரிகள் மேலும் இருவர் சட்டமன்றம்  செல்வது மக்கள் குரலை வலுப்படுத்தும்! பெ. சண்முகம் பேட்டி

இடதுசாரிகள் மேலும் இருவர் சட்டமன்றம் செல்வது மக்கள் குரலை வலுப்படுத்தும்!

பெ. சண்முகம் பேட்டி

கோயம்புத்தூர், செப். 14 -மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வென்று இடதுசாரிகள் மேலும் இருவர் சட்டமன்றத்திற்குச் சென்றால், அது உழைக்கும் மக்களின் குரலை மேலும் வலுப்படுத்த உதவும் என மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்தார். கோவையில் கட்சியின் பீளமேடு நகரக் குழு சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட ‘தோழர் கே. தங்கவேல் நினைவரங்கம்’ மற்றும் புனரமைக்கப்பட்ட ‘தோழர் கே.ரமணி நினைவு இல்லம்’ திறப்பு விழாஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது; அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடமும் பொதுக் கூட்டத்திலும்பெ.சண்முகம் பேசினார்.

இடதுசாரிகள் சார்பில் மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவதாகக் கூறிய அவர், இது வெறும்போட்டிக்காக அல்ல, தேர்தல் ஒரு அரசியல் போராட்டம் என்பதற்காகவும், ‘தமிழகம் இனி இடது பக்கம்’ என்றகொள்கை முழக்கத்தை முன்வைப்பதற்காகவுமே களம் காண்பதாகத் தெரிவித்தார். கட்சியின் இந்த முடிவு தோழர்கள் மத்தியிலும் சமூக வலைதளங் களிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், அறிவுஜீவி கள் உள்ளிட்டஅனைத்துத் தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ள தாகவும் அவர் கூறினார். மூன்று அணிகளிலும் இடம்பெறாத பிற கட்சிகள்இடதுசாரிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும், அக்டோபர் 15 அன்று திருச்சியில் இடதுசாரிக் கட்சிகள் சார்பில்மாபெரும் பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளதாக வும் அவர் தெரிவித்தார்.தனியார் பல்கலை., நன்செய் நில சட்டத் திருத்ததை ஏற்க முடியாதுதவெக அரசுக்கு அளித்தஆதரவு தொடர்ந்தாலும், உழைக்கும் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அரசு எடுக்கும்போது உடனடியாக எதிர்வினையாற்றுவதாக சண்முகம் கூறினார். திமுக ஆட்சியில் எதிர்க்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்கும் மசோதாவை, தற்போதைய அரசு சட்டப்பேரவைக்கூட்டத்தொடரின் கடைசி நாளில் அவசரமாக நிறைவேற்றியது கண்டிக்கத்தக்கது என்றார். நன்செய் நிலங்களைப் பிற பயன்பாட்டுக்கு மாற்றுவதில் ஊராட்சி மன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் அதிகாரத்தை நீக்கி, நகர்ப்புற நிர்வாக இயக்குநருக்கு அதிகாரம் வழங்கும் சட்டத் திருத்தம் உள்ளாட்சி அமைப்புகளின் உரிமையைப் பறிப்பதாகும் எனவும் அவர் விமர்சித்தார்.

தலைமைச் செயலகத்தை கிண்டியில் அமைக்கலாம்!

தற்போதைய தலைமைச் செயலகத்தில் இடநெருக்கடி, போக்குவரத்து நெரிசல் காரணமாகப் புதிய செயலகம் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எனக் கூறிய சண்முகம், 25 ஏக்கரில் பட்டினப்பாக்கத்தில் அமைத்தால் அப்பகுதி மீனவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றார். சென்னைக்குஉள்ளேயே அரசு வசம் உள்ள கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் 160 ஏக்கர் நிலம் போன்ற பொருத்தமான மாற்று இடங்களில் புதிய தலைமைச் செயலகத்தை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்வலியுறுத்தினார்.

சிறு, குறு தொழில்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்

அந்நிய முதலீட்டை ஈர்க்க முதலமைச்சர் வெளிநாடு சென்றுள்ள நிலையில், 100 நாளில் ஒரு லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாக அரசு கூறினாலும், என்ன தொழில், எத்தனை பேருக்கு வேலை என்பது வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை எனச் சண்முகம் சுட்டிக்காட்டினார். அந்நிய முதலீடு தவிர்க்க முடியாது என்றாலும், அதிக வேலைவாய்ப்பை உருவாக்குவது சிறு, குறு தொழில்களே என்பதால்அவற்றுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்றார். கோவை மாவட்டத் தொழில்முனைவோர் முதலமைச்சரைச் சந்திக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடுசெய்ததாகவும், ஆனால் சிறு, குறு தொழில்களின் கடன் உதவி, மானியம், மின் கட்டணச் சலுகை போன்ற கோரிக்கைகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அவையில் உள்ள நான்கு இடதுசாரி உறுப்பினர்களும் ஒவ்வொரு மணித்துளியையும் மக்கள் பிரச்சனைகளுக்காகப் பயன்படுத்துவதைத் தமிழ்நாடே பார்த்துக்கொண்டிருப்பதால், மேலும் இருவர் சட்டமன்றம் செல்வதற்கான வாய்ப்பை இரு தொகுதி மக்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.விழாவில் மத்தியக்குழு உறுப்பினர் என். குணசேகரன், மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன், மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், முன்னாள் எம்.பி. பி.ஆர். நடராஜன், திருப்பூர் மாவட்டச் செயலாளர் சி. மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்சிபிஎம், சிபிஐ வேட்பாளர்கள்இன்று மாலை அறிவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு மற்றும் அறிமுகக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப்.15) மாலை 5 மணிக்கு சென்னை, தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான பி. ராமமூர்த்தி நினைவகத்தில் நடைபெறுகிறது. சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், சிபிஐ(எம்.எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி ஆகியோர் வேட்பாளர்களை அறிமுகம் செய்கின்றனர்.

சிபிஎம் வேட்பாளர் நாளை வேட்புமனு தாக்கல்!

மதுராந்தகம் (தனி) சட்ட மன்றத் தொகுதியில் போட்டியிடும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம், புதன்கிழமை (செப். 16) அன்று, மதுராந்தகம் ஆர்.ஏ.ஆர். திருமண மண்டபத்தில், சிபிஎம் மாவட்ட செயலாளர் ப.சு. பாரதி அண்ணா தலைமையில் நடைபெறுகிறது. கட்சியின் மாநிலசெயலாளர் பெ. சண்முகம் வேட்பாளரை அறிமுகம் செய்கிறார்.

கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ். நம்புராஜன், சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.ராஜ் குமார், சிபிஐ (எம்எல்) விடுதலை மாவட்டச் செயலாளர் சொ. இரணியப்பன் மற்றும் இடதுசாரி - ஜனநாயக இயக்கங்களின் பொறுப்பாளர்கள்பங்கேற்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து, மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகில் இருந்து 1:30 மணிக்கு சிபிஎம் வேட்பாளர், கட்சித் தலைவர்கள் - தோழர்களுடன் ஊர்வலமாக சென்றுமனுத்தாக்கல் செய்கிறார். மாலை 4 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பணிமனை திறப்புவிழா நடைபெறுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.