ஆதீனத்தின் பிடியிலுள்ள நிலங்களை மாவட்டம் முழுவதும் மறுஅளவீடு செய்க! வைத்தீஸ்வரன்கோவில் போராட்டக் களத்தில் பெ. சண்முகம் வலியுறுத்தல்
yesterday

ஆதீனத்தின் பிடியிலுள்ள நிலங்களை மாவட்டம் முழுவதும் மறுஅளவீடு செய்க! வைத்தீஸ்வரன்கோவில் போராட்டக் களத்தில் பெ. சண்முகம் வலியுறுத்தல்

மயிலாடுதுறை, நவ. 24 –மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களையும் இடங்களையும் அரசு மறுஅளவீடு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

வைத்தீஸ்வரன்கோவில் நகரின் மையப்பகுதியில் ஆதீனம் பல ஆண்டுகளாக அனுபவித்து வந்த அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில், குடிமனை இல்லாத 50-க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்கள், கட்சியின் சீர்காழி ஒன்றியச் செயலாளர் கரிகாலன் தலைமையில் நவம்பர் 16 முதல் குடிசை கட்டிக் குடியேறி, இரவு பகலாகப் போராடி வருகின்றனர். 8-ஆவது நாளான திங்களன்று போராட்டக் களத்துக்கு வந்த பெ. சண்முகம், “பட்டா வழங்கும் வரை இந்த இடத்தை விட்டு யாரும் செல்ல வேண்டாம். ஆதீனம் வளைத்து வைத்திருந்த இந்த இடம் அரசுக்குச் சொந்தமானது என்பதை அரசுக்கே தெரிய வைத்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு அதிகாரிகள் பாராட்டு விழாவே நடத்தலாம்” என்றார்.

“ஆதீனத்துக்கு ஆவணம் இல்லை” – கோட்டாட்சியர் ஆணை

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:கட்சியின் தலையீட்டால், இந்த 2 ஏக்கர் நிலம் அரசுக்குச் சொந்தமானது என்பது இப்போது உறுதியாகி யுள்ளது. நவம்பர் 19 அன்று ஆய்வு செய்து ஆணை பிறப்பித்துள்ள சீர்காழிவருவாய்க் கோட்டாட்சியர், இது ஆதீனத்துக்குச் சொந்தம் என்பதற்கு எந்த ஆவணமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அரசு ஆவணங்களில் இது நத்தம் நிலமாகப் பதிவாகியுள்ளது. நத்தம் என்பது அரசுக்குச் சொந்தமான குடியிருப்பு நிலம்; அதை வழங்குவதென்றால் ஒரு குடும்பத்துக்கு ஒரு மனைதான் வழங்க முடியும். பல ஆயிரம் ஏக்கர் நிலம் வைத்துள்ள ஆதீனம் இந்த இடத்தைச் சொந்தம் கொண்டாடத் தேவையில்லை. இதையொட்டியுள்ள 3 ஏக்கர் அரசுக் குளத்தையும் மீட்டுப் பேரூராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஆவணத்தைப் பார்க்காமலே ஆதீனச் சொத்தாக...

தமிழகத்தில் லட்சக்கணக்கான குடும்பங்கள் சொந்த வீட்டுமனை இன்றிச் சாலையோரங்களிலும், சாக்கடை ஓரங்களிலும், நீர்நிலைப் புறம்போக்குகளிலும் தலைமுறை தலைமுறையாக வாழ்கின்றன. கட்சியும் அதன் வெகுஜன அமைப்புகளும் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாகப் பல அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு, ஆண்டுதோறும் சில லட்சம் குடும்பங்களுக்குப் பட்டா வழங்கப்படுகிறது. ஆனாலும் குடியிருப்புப் பிரச்சனை தீராமல் தொடர்கிறது. இந்த நிலையில், தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பல மடங்கள் அரசுப் புறம்போக்கு நிலங்களை வளைத்து வைத்துக்கொண்டுள்ளன. அவை மடத்துக்குச் சொந்தமானவை என்று எந்த ஆதார ஆவணத்தையும் பரிசீலிக்காமலேயே வருவாய்த்துறை யும் மாவட்ட நிர்வாகமும் ஏற்றுக்கொ ண்டதால், நூற்றுக்கணக் கான ஏக்கர் நிலங்களும் குளங்களும் இவ்வாறு அனுபவிக்கப்படுகின்றன. ஒரு சென்ட் நிலம்கூட இல்லாமல் மக்கள் தெருவில் வாழும்போது, பல ஆயிரம் ஏக்கர் நிலம் வைத்துள்ள ஆதீனம் அரசுக்குச் சொந்தமான இடத்தையும் வளைத்து வைத்திருப்பது சகிக்க முடியாதது; வன்மையான கண்டனத்துக்குரியது.

பட்டா வழங்கும் வரை போராட்டம்

கிராமப்புறங்களில் குடியிருப்புக்கு 5 சென்ட் வரை வழங்கலாம் என்பது, தற்போது 3 சென்ட் வரை என அரசாணை திருத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள் உள்ளிட்ட குடிமனை இல்லாத மக்களுக்கு இங்கு மனை அளந்து உடனடியாகப் பட்டா வழங்க அரசு முன்வர வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும். இவ்வாறு பெ. சண்முகம் தெரிவித்தார்.

மாவட்டச் செயலாளர் பி. சீனி வாசன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி. சிங்காரவேலன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ். துரைராஜ், ப. மாரியப்பன், டி. சிம்சன், ஜி. வெண்ணிலா, ஏ. ரவிச்சந்திரன், சி. விஜயகாந்த், கே.பி. மார்க்ஸ், டி.ஜி. ரவி உள்ளிட்டோர் போராட்டத்தில் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர். (ந.நி.)