படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை நாசம் செய்த திமுக, அதிமுக ஆட்சியாளர்கள் தவெக அரசாவது உற்பத்தியை தொடங்குமா?
1 hour before

படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை நாசம் செய்த திமுக, அதிமுக ஆட்சியாளர்கள் தவெக அரசாவது உற்பத்தியை தொடங்குமா?

மதுராந்தகம், செப். 22 -செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்துள்ள படாளம் கிராமத்தில் 1961-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படாளம் கூட்டுறவு சர்க்கரைஆலையில் சுமார் 30 ஆயிரம்கரும்பு விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், மேல்மருவத்தூர், விழுப்புரம் மாவட்டத்தின் வானூர், திண்டிவனம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் உத்திரமேரூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கோட்டங்கள் இச்சர்க்கரை ஆலையின் எல்லைக்குள் வருகின்றன.ஆலை தொடங்கப்பட்ட போது நாளொன்றுக்கு 1,000 டன்னாக இருந்த அரவை திறன், 1995-ஆம் ஆண்டில் 2,500 டன்களாக விரிவாக்கம் செய்யப்பட்டது. சில நிர்வாக காரணங்களால் 2009-ஆம்ஆண்டு வரை அரவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், 2010-இல் அரசுஅளித்த ரூ.33 கோடி நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்டு மீண்டும் இயங்கத் தொடங்கியது. 2021-22-ஆம் ஆண்டு அரவை பருவத்தில் 1.92 லட்சம் டன்,2022-23-இல் 2 லட்சம் டன், 2023-24-இல் 1.61 லட்சம்டன் எனக் கரும்பு அரவை செய்யப்பட்ட நிலையில், 2024-25-ஆம் ஆண்டில் அது 70 ஆயிரம் டன்னாகக்குறைந்தது. இவ்வாறு அரவை திறன் படிப்படியாகச் சரிந்து வந்த நிலையில், நடப்பாண்டில் ஆலை இயங்குமாஎன்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

2025-26-ஆம் ஆண்டு அரவைப் பருவத்திற்காக 3,200ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளதாகவும், 1 லட்சம் டன்அரவை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ஆலை நிர்வாகம்தெரிவிக்கிறது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாகக் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கரும்பு சாகுபடி பரப்பளவு தொடர்ந்து சரிந்துவருகிறது. அரசு வழங்கும் கொள்முதல் விலை குறைவாக இருப்பதும், வெட்டுக்கூலி முறைப்படுத்தப்படாததுமே சாகுபடி குறைவுக்குக் காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதனிடையே, ஆலை நிர்வாகம் படாளம் ஊராட்சிக்குச் செலுத்த வேண்டிய தொழில் வரி நிலுவைத் தொகை ரூ.5 கோடியைத் தாண்டியுள்ளது. இதனால் ஊராட்சிப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலைஏற்பட்டுள்ளது.

இது குறித்து கரும்பு விவசாயிகள் கூறுகையில், “கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.3,290 மற்றும் மாநில அரசின் ஊக்கத்தொகையாக ரூ.349 மட்டுமேவழங்கப்படுகிறது. ஆனால் டன் ஒன்றுக்குச் சாகுபடி செலவு ரூ.4,000 வரை ஆகிறது. மேலும், கரும்புவெட்டுக்கூலியாக டன்னுக்கு ரூ.1,100 முதல் ரூ.1,500 வரை செலவிட வேண்டியுள்ளது. ஆலையின் அரவை நின்றுமூடப்பட்டால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே, கரும்பு சாகுபடியை ஊக்கப்படுத்த டன்னுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும். வெட்டுக்கூலியை அரசே நிர்ணயம் செய்வதோடு, விதைகரணைகளை மானியமாக வழங்க வேண்டும்” என வலியுறுத்தினர். மேலும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமலும், ஆலைக்கு போதிய நிதி ஒதுக்காமலும் கடந்த கால ஆட்சியில் இருந்தவர்கள் புறக்கணித்ததே தற்போதைய நிலைக்குக் காரணம் என்றும், அடுத்தமாதம் அரவை தொடங்க வேண்டிய சூழலில் அதற்கான எந்த ஆயத்தப் பணிகளும் துவங்கப்படவில்லை என்றும் வேதனை தெரிவித்தனர்.

வாழ்வா சாவா நிலைஇது குறித்துப் படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் தொழிலாளியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகியுமான ஜி.மோகனன் கூறுகையில், “மதுராந்தகம் வட்டாரத்தின் ஒரே தொழிற்சாலையான இச்சர்க்கரை ஆலை தற்போது வாழ்வா சாவாநிலையில் உள்ளது. இந்த ஆண்டு 64,000 டன் கரும்பு மட்டுமே கிடைக்கவாய்ப்புள்ளது. நிதிப்பற்றாக்குறை மற்றும் கொள்முதல் விலை மிகக்குறைவாக இருப்பதே சாகுபடி சரிவுக்குக் காரணம். இதனால் திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் பகுதி விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

முன்பு இத்தொகுதியில் ஐந்துஆண்டுகள் எம்.எல்.ஏ-வாக இருந்த மரகதம் குமாரவேல் இத்தொழிற்சாலையைப் பற்றி கவலைப்படவே இல்லை. தொழிலாளர், விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. த.வெ.க அரசு இந்தஆலையை திறந்து உற்பத்தியை தொடங்க வேண்டும். எனவே, வாக்காளர்கள் அரிவாள் சுத்தியல் நட்சத்திரசின்னத்தில் வாக்களித்து தம்மை வெற்றி பெறச் செய்தால்,இந்த ஆலை முழுமையாக இயங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வேட்பாளர் சுகந்தி கூறியுள்ளார்.