லேப் கல்வி, நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
17 hours before

லேப் கல்வி, நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை, ஆக. 18–பரிசோதனை நிலையங்களில் மருந்து விற்பனை அனுமதி மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கே கையெழுத்திடும் உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கம் சார்பில் ராணிப்பேட்டையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முத்துக்கடை பேருந்து நிலையம் அரு கில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலப் போராட்டக் குழுத் தலைவர் எல்.டி. தா.வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எல்.டி. வினோத் வரவேற்புரையாற்றினார். அகில இந்தியத் தலைவர் எல்.டி. காளிதாஸ், மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ். சம்பத்குமார், விழுப்புரம் துணைச் செயலாளர் சுரேஷ், மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் பாலாஜி, தாம்பரம் மாவட்டத் தலைவர் குமார் மற்றும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பின் மாவட்டச் செயலாளர் செ. சர வணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். நிகழ்வின் நிறைவாக எல்.டி. கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.