தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

செயற்கை நுண்ணறிவு காலத்தில் புகைப்படக் கலையின் நிலை சென்னையில் சிறப்பு கலந்துரையாடல்

6 hours before
செயற்கை நுண்ணறிவு காலத்தில்  புகைப்படக் கலையின் நிலை சென்னையில் சிறப்பு கலந்துரையாடல்

செயற்கை நுண்ணறிவு காலத்தில் புகைப்படக் கலையின் நிலை சென்னையில் சிறப்பு கலந்துரையாடல்

சென்னை, செப்.12-செயற்கை நுண்ணறிவு புகைப்படங்களுக்கும் செயற்கை பிம்பங்களுக்கும் இடையேயான எல்லையை மங்கச் செய்துவரும் காலகட்டத்தில், புகைப்படக் கலையின் காலத்தால் அழியாத முக்கியத்துவம் குறித்து விவாதிக்க ‘சென்னை போட்டோ பைலேனி’ (சிபீபி) சார்பில் ‘ஏன் படங்கள் முக்கியம்?’ என்ற சிந்தனையைத் தூண்டும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கொட்டிவாக்கத்தில் உள்ள ‘சிக்மா இந்தியா’ தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், உலகப் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் செந்தில் குமரன், கலைஞர் திவ்யா ரவிசங்கர், காட்சி வடிவமைப்பாளர் அசோக் சரவணன் மற்றும் சிக்மா இந்தியாவின் இயக்குநர் அனந்தசயனன் சேஷன் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தை சென்னை போட்டோ பைலேனியின் இணை நிறுவனர் வருண் குப்தா தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய செந்தில் குமரன், ஒரு சக்திவாய்ந்த புகைப்படம் என்பது சட்டகத்திற்குள் தெரிவது மட்டுமல்லாமல், அதற்குக் பின்னால் உள்ள காலமும் அர்ப்பணிப்புமே அதன் ஆழத்தைத் தீர்மானிக்கிறது என்றார். கலைஞர் திவ்யா ரவிசங்கர், தன் சொந்த எண்ணங்களை காட்சி மொழியாக மாற்ற போட்டோகிராபி உதவுவதாகவும், முறையான அங்கீகாரங்கள் புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுப்பதாகவும் குறிப்பிட்டார்.

புகைப்படம் என்பது கூர்ந்து கவனிக்கும் செயல் என்று குறிப்பிட்ட அசோக் சரவணன், மனிதக் கண்ணோட்டத்தின் தனித்துவத்தை வலியுறுத்தினார். சிக்மா இந்தியாவின் இயக்குநர் அனந்தசயனன் சேஷன் கூறுகையில், “தொழில்நுட்பம் புகைப்படக் கலைஞரை நீக்காது; மாறாக உங்களை மேலும் வளர்த்துக்கொள்ளும்” என்றார். மேலும், ‘The Art of Engineering’ தத்துவத்தின் அடிப்படையில் படைப்பாளிகளின் பார்வையை நிறைவேற்ற சிக்மா தொடர்ந்து உறுதுணையாய் நிற்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.