சாலையோர வியாபாரிகளை அடாவடியாக அப்புறப்படுத்தி, ஏழை, எளிய மக்கள் மீது அதிகாரத்தை செலுத்தும் போலீசார்
7 hours before
<p><strong>சாலையோர வியாபாரிகளை அடாவடியாக அப்புறப்படுத்தி,ஏழை, எளிய மக்கள் மீது அதிகாரத்தை செலுத்தும் போலீசார்</strong></p><p>அவிநாசி, ஆக.16-அவிநாசி நகராட்சிப் பகுதியில் சாலையோர வியாபாரிகளை போலீசார் அடாவடியாக அப்புறப்படுத்திய சம்பவத்திற்கு சிஐடியு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.திருப்பூர் மாவட்டம், அவிநாசி நகராட்சிக்குட்பட்ட சிந்தாமணி திரையரங்கம் முதல் அவிநாசி புதிய பேருந்து நிலையம், கைகாட்டி, பழைய பேருந்து நிலையம், சேவூர் சாலை உள்ளிட்டபகுதிகளில் சாலையோர தள்ளுவண்டிகளில் மற்றும் கட்டில்கள் அமைத்து உணவகம், பூக்கடை, பழக்கடை, பொறிக்கடை, உள்ளிட்டு பல வகையாக 200க்கும் மேற்பட்டோர் கடைகள் வைத்து நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக, சாலையோரத்தில் கடைகள் அமைக்கக்கூடாது என அவிநாசி நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்கத்தினர் சாலையோர வியாபாரிகளை வைத்து தேர்தல் நடத்தி முறையான வெண்டிங் கமிட்டி அமைக்கப்பட்டு, சாலையோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்த வேண்டும் எனக்கூறி நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தனர். இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் ‘நான் வெண்டிங்சோன்’ என்று குறிப்பிட்டு காவல்துறை உதவியுடன் ஞாயிறன்று சாலையோர வியாபாரிகளிடம் கடைகளை எடுக்குமாறு கூறினர்.</p><p> இதுகுறித்து தகவலறிந்த சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் முத்துசாமி, பொதுத்தொழிலாளர் சங்கத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, செயலாளர் ராஜன், விசைத்தறி சங்க மாவட்ட நிர்வாகி பழனிச்சாமி, கட்டுமான சங்கஒன்றியத் தலைவர் வேலுச்சாமி, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பழனிச்சாமி, ஏஐடியூசிநிர்வாகிகள் பழனிச்சாமி, சண்முகம், முத்துசாமி உள்ளிட்டோர், முறையாக இந்த இடத்தில் கடை போடக்கூடாது என்றுநோட்டீஸ் கொடுங்கள்; அதன்பின் கடைகளை எடுத்து விடுகிறோம் என்றனர். இந்த பேச்சுவார்த்தையானது மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. அப்போது, தொழிற்சங்கங்களின் கோரிக்கையை நிராகரித்து, பொறுப்பு துணை காவல் கண்காணிப்பாளர், நகராட்சி பணியாளர்கள் மற்றும் போலீசாரை வைத்து சாலையோர வியாபாரிகளிடமிருந்து பொருட்களை அகற்றினர். இதனால் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும், இரு தொழிற்சங்கத்தினர், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p>
